“டின்டின் இன் அமெரிக்கா” என்ற படக்கதையின் அட்டை பாரிஸில் இதுவரை இல்லாத அளவில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 1932 ல் கையால் வரையப்பட்ட இந்த படங்கள் 16 லட்சம் டாலருக்கு விலைபோய் உள்ளது. பெல்ஜிய நகைச்சுவை சிறுவனைக் கதாநாயகனாகக் கொண்ட இந்த புத்தகத்தின் முதலாவது வெளியீடு மற்றும் அதன் மூலப்பிரதி மற்றும் அது சார்ந்த விளையாட்டுப்பொருட்களும் என மொத்தம் 700 பொருட்கள் அங்கு ஏலத்தில் விற்கப்பட்டன. 1920ல் டின்டின்னின் சாகசங்கள் என்ற இந்த படக்கதைகள் பெல்ஜியநாட்டு எழுத்தாளரான ஜோர்ஜஸ் றெமியினால் எழுதப்பட்டதாகும். இந்த புத்தகத்தின் அட்டையில் “கௌபாய்” போன்று காட்சியளிக்கிறார் கதாநாயகன். அவருக்கு பின்னால் ஒரு கோடரியுடன் ஒரு செவ்விந்தியர் இருப்பார். இப்புத்தகம் கடுமையான போட்டிக்கு மத்தியில் படக்கதைகளில் அதிக ஆர்வம் கொண்ட ஒரு தனிநபரால் வாங்கப்பட்டது. இது போல் டின்டின் சந்திரனுக்கு சென்று செய்யும் சாகசங்கள் பற்றிய ஒரு புத்தகத்தில், சந்திரனுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங்கின் கையெழுத்து இடப்பட்டு, அதுவும் அங்கு நல்ல விலைக்கு விற்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: