ஊத்தங்கரை, ஜுன் 5-
இந்த ஆண்டு நடை பெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப் பட்டது. அதில் ஊத்தங் கரை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 99 விழுக்காடு வெற்றி பெற்று சாதனை படைத் துள்ளனர்.அதிகபட்சமாக கோவிந் தாபுரத்தைச் சேர்ந்த கௌ தம் மற்றும் ஊத்தங்கரை யைச் சேர்ந்த கே.தாமோதி ரன் ஆகியோர் 474 மதிப் பெண்கள் பெற்று பள் ளியில் முதலிடம் பிடித்துள் ளனர். ஊத்தங்கரையைச் சேர்ந்த மணிவண்ணன் 470 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், கயாஸ் 469 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பெற் றுள்ளனர். ஊத்தங்கரை பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் 90 விழுக் காடு தேர்ச்சி அடைந்துள் ளனர்.ஊத்தங்கரையை அடுத்த கூட்ரோட்டினை சேர்ந்த எம்.சரண்யா என்பவர் 462 மதிப்பெண்கள் பெற்று பள் ளியில் முதல் இடத்தையும், ஊத்தங்கரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி 456 மதிப் பெண்கள் பெற்று 2ம் இடத் தையும் ஆர். சுசித்ரா 455 மதிப் பெண்கள் பெற்று 3ம் இடத் தையும் பிடித்துள்ளனர். இது குறித்து சரண்யா வின் வகுப்பாசிரியர் அருள் பிரசாத் கூறியதாவது;மாணவிகளின் ஈடுபா டும் ஆசிரியர்களின் அயராத உழைப்புமே இவ்வெற்றிக்கு காரணம் என தெரிவித்தார். வெற்றியடைந்த மாணவிக ளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: