கோயம்புத்தூர், ஜூன் 5-காங்கிரஸ் தலைலைமயிலான ஐக் கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட் டின் உழைப்பாளி மக்கள் மீது தொடுத்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்குதலுக்கு எதிராக ஜூலை 2 முதல் 8 வரை நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தையும் அதைத் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டங் களையும் நடத்துவதற்கு சிஐடியு பொதுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.ஜூன் 2 முதல் 5 வரை கோயம் புத்தூரில் சிஐடியு அகில இந்திய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறைவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிஐடியு தலை வர் ஏ.கே. பத்மநாபன், பொதுச் செயலா ளர் தபன்சென் எம்.பி, மாநில பொதுச் செயலாளர் அ. சவுந்தரராசன் எம்எல்ஏ ஆகியோர் தெரிவித்ததாவது:மத்திய அரசு கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகள் கார ணமாக தொழிலாளர்கள் மற்றும் சாதா ரண ஏழை மக்கள் மீது தொடுக்கப்ப டும் தாக்குதல்களுக்கு எதிராகவும், பல் வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேசம் தழுவிய அள வில் வலுவான பிரச்சாரம் மேற்கொள் வது என தீர்மானித்துள்ளோம்.விலைவாசி உயர்வு, நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் காணப்படும் ஒப்பந்த தொழிலாளர் முறை ஆகியவற் றைக் கண்டித்தும், சம வேலைக்கு சம ஊதியம், குறைந்த பட்ச ஊதியமாக மாதத்திற்கு ரூ.10,000 அளிப்பது, தொழிற்சங்க உரிமை, தொழிற்சங்க அங்கீகாரம், அனைவருக்கும் உத்தரவா தப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தை அளிப் பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தும் எதிர்வரும் ஜூலை2 முதல் 8 வரையிலான ஒரு வார காலத்தில் தேசம் தழுவிய அளவில் — தொடர்ச்சி 3ம் பக்கம்

Leave A Reply

%d bloggers like this: