வேலூர், ஜூன் 5-
ஆம்பூர் அசனாத் இஜாரியா பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி டி. முஸ்பா பாத்திமா. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் உருது பாடத்தில் 96 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் விவரம்: உருது 96, ஆங்கிலம் 92, கணிதம் 73, அறிவியல் 94, சமுக அறிவயில் 99 என மொத்தம் 454. பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்து வம் படித்து கிராம மக்களுக்கு சேவை செய்வதே லட்சி யம் என்றார்.வாணியம்படி இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அஸ்மா உல் உஸ்னா நூற்றுக்கு 96 மதிப் பெண் பெற்று மாநில அளவில் 2ம் இடம் பிடித்துள் ளார். இவர் மொத்தம் 410 மதிப்பெண்கள் பெற்றுள் ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக 9ம் வகுப்பில் படிப்பை நிறுத்த முயன்றேன். ஆனால் பள்ளி தலைமை ஆசிரியர், உருது ஆசிரியர் ஆலோசனைபடி மீண்டும் படிப்பை தொடர்ந் தேன் என்றார். தந்தை சாயித்பாஷா சரிகைத் தொழில் செய்து குறைந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். ஆசிரி யர்களின் ஆலோசனையால் மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளேன். தொடர்ந்து படித்து பொறி யாளராக விரும்புகிறேன் என மகிழ்ச்சியுடன் கூறினார். மாணவி அஸ்மா உல் உஸ்னா மாணவிகளை ஆசிரியர் கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்

Leave a Reply

You must be logged in to post a comment.