திருப்பூர், ஜூன் 5-திருப்பூர் மாவட்ட கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய பேரவைக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.அவிநாசி விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இப்பேரவையில் மாவட்டச் செயலாளர் டி.குமார், துணைத் தலைவர் எம்.பத்மநாபன் ஆகியோர் பங்கேற்று சங்க வளர்ச்சி குறித்து உரையாற்றினர். விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் பி.முத்துசாமி வாழ்த்திப் பேசினார். இதில் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஆர்.வேலுச்சாமி, துணைத் தலைவராக கிருஷ்ணசாமி, செயலாளராக பி.கனகராஜ், துணைச் செயலாளராக ஜி.ஈஸ்வரன், பொருளாளராக ஏ.ராஜன் ஆகியோர் உள்பட மொத்தம் 15 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய செயல்பாட்டை துரிதப்படுத்தி நலவாரியப் பலன்கள் உடனடியாகக் கிடைக்கச் செய்ய வேண்டும், கட்டுமானப் பொருட்கள் விலையேற்றத்தைக் குறைக்க வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட வேண்டும், பெட்ரோல் விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: