கொல்கத்தா, ஜூன் 5-ஏகாதிபத்தியத்திற்கு எதி ராக இடது முன்னணி போராட்டங்களை மேற் கொள்ளும் என மேற்கு வங்க இடதுமுன்னணி தலை வர் பிமன்பாசு தெரிவித் தார்.வல்லரசு நாடாகவும் ஏகாதிபத்திய நாடாகவும் தன்னைக் காட்டிக்கொள்ள ஒவ்வொரு தருணத்திலும் சிறிய நாடுகளையும் வள ரும் நாடுகளையும் மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடு வது அமெரிக்காவின் வாடிக்கையாக உள்ளது.தனது உத்தரவுக்கு பணி யாத நாட்டின் மீது பொரு ளாதாரத் தடையை மேற் கொள்வதுடன், தனக்கு பிடிக்காத நாட்டின் மீது இதர நாடுகளும் பொருளா தாரத் தடை விதிக்க வேண்டு மென்றும் அமெரிக்கா உத் தரவு பிறப்பித்து வருகிறது.தற்போது ஆசியா-பசி பிக் பிராந்தியத்தில் அமெ ரிக்கா தனது கடற்படையின் பெரும்பான்மையான பகுதியை நிறுத்தப்போவ தாக தகவல்கள் வருகின்றன.இதுகுறித்து மேற்கு வங்க இடதுமுன்னணியின் தலைவர் பிமன்பாசு கொல் கத்தாவில் திங்கட்கிழமை கூறுகையில், அமெரிக்கா வின் இந்த மிரட்டல் நடவ டிக்கை அறிவிப்பு 2ம் உல கப்போர்காலத்தில் நடந்த நிகழ்வுகளை மீண்டும் நினைவூட்டுவதாக உள்ளன. எனவே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இடதுமுன்னணி எதிர்ப்புப்போராட்டங்களை மேற்கொள்ளும் என்றார்.சீனா-தென்கிழக்கு ஆசிய கடல் பகுதியில் தனது கடற்படை பலத்தை அதிகரிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மீண்டும் அதிகரித்து வரும் இத்த கைய ஏகாதிபத்திய நடவ டிக்கைகளுக்கு எதிராக இடதுமுன்னணி எதிர்ப்புப் போராட்டம் நடத்தும் என இடதுமுன்னணி குழுக் கூட்டத்திற்குப்பின்னர் பிமன்பாசு தெரிவித்தார்.இந்தப்போராட்டத்திற் கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் இடதுமுன்னணி யில் இல்லாத இதர இடது சாரி சக்திகளையும் போராட் டத்திற்கு அழைப்போம் என் றார்.
கருத்தரங்கு
மேற்குவங்க மாநிலத் தில் முதல் இடது முன்னணி அரசு 1977ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி அமைந் தது. ஜோதிபாசு முதல்வ ராக பதவியேற்றார். இதை யொட்டி ஜூன் 21ம் தேதி இடதுமுன்னணி கருத்த ரங்கு நடத்துகிறது. இதில் இடது முன்னணியின் மாநி லத்தலைவர்கள் பங்கேற் பார்கள். இதில் உரை நிகழ்த்த பொருளாதார நிபுணர்கள், சமூக ஆய்வாளர்கள், பத்தி ரிகையாளர்கள் அழைக்கப் படுவார்கள் என்று பிமன் பாசு கூறினார்.மாநிலத்தில் 6 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர் தல் நடந்த மறுநாள் பல் வேறு பகுதிகளில் வன் முறை நிகழ்வுகள் நடந்துள் ளன. திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இந்த வன் முறையை நடத்தியுள்ளனர். இது உடனடியாக நிறுத்தப் படவேண்டும் என்று மாநில அரசுக்கு இடதுமுன்னணி சார்பில் பிமன்பாசு வேண் டுகோள் விடுத்தார்.

Leave A Reply

%d bloggers like this: