சென்னை, ஜூன் 5 -அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனி யார் மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளி இயக்குநர் அலுவலகத்தை திங்களன்று (ஜூன் 4) முற்றுகையிட்டனர்.இது பற்றிய விபரம் வருமாறு :-அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகல்வித் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் தெரி வித்தார்.ஆனால் அவ்வாறு அரசு சட்டங்களுக்கு கட்டுப்படாமல் செயல்படும் பல பள்ளிகளை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியும், அப் பள்ளிகள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை.மேலும் அரசு நிர்ண யித்த கட்டணத்தை மட் டும் செலுத்தும் மாணவர் களை பள்ளியில் தனிமை படுத்தி, மனரீதியாக துன் புறுத்துவது, பெற்றோர் களை மிரட்டுவது, போன்ற கொடூர செயல்களில் தனி யார் பள்ளிகள் ஈடுபட்டு வருகின்றன. அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கு எதிராக சில பள்ளிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைக் குள்ளான மாணவர்களுக்கு கட்டாய மாற்று சான்றிதழை வழங்கி வருகின்றன.
இதுகுறித்து கட்டண நிர்ணயக்குழு தலைவரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த பயனுமில்லை. எனவே, தொடர்ந்துதவறு செய்து வரும் தனியார் பள்ளி நிர்வாகிகள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண் டும், அரசு சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாத பள்ளி களின் அங்கீகாரத்தை ரத்து செய்து, அப்பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத இயக்குநராக அலு வலர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் 25 தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.பின்னர் பெற்றோர்களிடமிருந்து இயக் குநர் செந்தமிழ்செல்வி கோரிக்கை மனுவை பெற் றுக் கொண்டு புகார் தெரி வித்த பள்ளிகளின் தலை மையாசிரியர்களைஅழைத் துப் பேசினார்.
எச்சரிக்கை
மாணவர்களிடம் கூடுத லாக வசூலிக்கப்பட்ட பணத்தை திரும்ப வழங்க வேண்டும், 10 நாட்களுக் குள் இதனை செய்து முடிக்கவேண்டும்.இல்லையென்றால் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்று இயக்குநர் எச்சரித்துள்ளார்.

Leave A Reply