புதுச்சேரி, ஜூன். 4-தானே புயலால் புதுவையில் ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்ட நிலையில் மார்ச் மாத முதலே கோடை வெயில் வறுத்தெடுக்க தொடங் கியது. இதற்கிடையே கடந்த மாதம் (மே) 4ம் தேதி அக்னி நட் சத்திரம் தொடங்கியதில் இருந்து புதுவையில் வெயில் மக் களை வாட்டி வதைக்க தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதால் இத்துடன் ஓரளவு வெயில் குறையும் என்று புதுவை மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.அக்னி நட்சத்திரம் முடிந்து 2 நாட்கள் மட்டுமே ஓர ளவு வெயில் குறைந்திருந்தது. ஆனால் அதன்பிறகு வெயி லின் தாக்கம் அதிகரித்து விட்டது. கோடை வெயில் கொடூ ரம் என்றாலே சென்னை-வேலூர் ஆகிய இடங்களைத்தான் கூறுகிறார்கள். ஆனால் அதனையும் மிஞ்சும் வகையில் புதுவையில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. புதுவையில் தொடர்ந்து 107 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கிறது. காலை 11 மணிக்கே வெயில் கொடுமை அதிகரித்து விடுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சும் நிலையை வெயில் ஏற்படுத்தி விட்டது.சென்னையிலும் வெயிலின் அளவு குறையாமல் மக் களை தொடர்ந்து வாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: