குவாகாத்தி, ஜூன் 4 -புகழ்பெற்ற பாடகர் பூபன் ஹசாரிகாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில், நாட்டில் உள்ள 5 ஆயிரத்து 406 கிடார் இசைக் கலைஞர்கள் அசாம் தலைநகர் கௌகாத்தியின் சருசஜாய் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை கூடி, ஹசாரிகாவில் புகழ்பெற்ற மிஸ்திர்னே பரோரை இசைத்து, லிம்கா சாதனை படைத்தனர்.ஹசாரிகாவின் பாடலை பாடி முடிந்ததும் லிம்கா சாதனை புத்தக அதிகாரி ஸ்மிதா தாமஸ் இது தேசியச் சாதனை என அறிவித்தார். இதற்கு முன்னர் தேசியச் சாதனையாக ஷில்லாங்கில் 1,730 கிடார் இசைக்கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தினர். அவர்கள் 2007ம் ஆண்டு பாப் டைலனின் சொர்க்கத்தின் கதவை தட்டுதல் பாடலை இசைத்தனர்.3 கிடார் ஆர்வலர்கள் ஹோப் ஈவன்ட் என்ற பெயரில் 5,406 கிடார் இசைக்கலைஞர்கள் ஒரே இடத்தில் அழைத்து, தேசிய சாதனைக்கு வழிவகுத்தனர். அவர்கள், போலந்து நாட்டை சேர்ந்த 6,346 கிடார் இசைக்கலைஞர்கள் செய்துள்ள உலகச்சாதனையை முறியடிக்க இலக்கு கொண்டுள்ளனர்.இந்த சாதனை இசை நிகழ்ச்சியில் தொழில் நிபுணத்துவம் வாய்ந்த, தொழில் சாராத மற்றும் சிறுவனர்கள் குவித்து, கடும் மழையின்போதும் இசைநிகழ்ச்சியை நடத்தினர். புகழ்பெற்ற பாடகர் ரூபம் புயப்பாடல் களைப் பாடினார்.புகழ்பெற்ற அசாம் பாடகர் சுதக்ஷின்கா சர்மா, அவரது சகோதரர் சமா ஹசாரிகா கூறுகையில் பாடகருக்கான புகழ் அஞ்சலியின் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவித்தனர்.கலாச்சாரத்துறை அமைச்சர் பிரணத் புகன், இந்தி பாடலின் சில வரிகளைப் பாடினார்.

Leave A Reply

%d bloggers like this: