கரூர், ஜூன் 4-கரூர் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் மக் கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெ.ஷோபனா தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் பொது மக்கள் தங்களது கோரிக் கைகள் அடங்கிய மனுக் களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்தனர். பொதுமக்களின் பல் வேறு கோரிக்கை மனுக் களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களிடம் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத் திட உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில் கடவூர் வட்டத்தைச் சேர்ந்த 13 பயனாளிகளுக்கும் கிருஷ் ணராயபுரம் வட்டத்தைச் சேர்ந்த 12 பயனாளிகளுக் கும் கரூர் வட்டத்தைச் சேர்ந்த 5 மாற்றுத்திறனாளி களுக்கும் முதியோர் உதவித் தொகைக்கான ஆணை களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் நல அலுவலர் எ.ராம சாமி, மாவட்ட சமூக நல அலுவலர் சி.கலைவாணி உள்ளிட்ட அனைத்து அர சுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply