சென்னை, ஜூன் 4 –
வேளச்சேரி அ.கணேசன் மெட்ரிகுலேசன் மேனி லைப் பள்ளி மாணவி எஸ்.சந்தியா பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் இரண்டு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் வேளச்சேரி ஏ.கணேசன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி மாணவி எஸ்.சந்தியா சமூக அறிவியல், அறிவியல் ஆகிய இரண்டு பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் 500க்கு 491 மதிப் பெண்கள் பெற்று பள்ளியின் முதல் இடத்தைப் பெற் றுள்ளார்.500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ள மாணவர் ஆர். ஸ்ரீகாந்தும் அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப் பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி ஏ.தங்கமதி சூர்யா 466 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். தேர்வெழுதிய அனை வரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளி யின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ.கணேசன், தாளா ளர் ஜி. ராஜேந்திரன், முதல்வர் பி.ஜெயகாந்தி மற்றும் ஆசிரியர் கள் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave A Reply