நாமக்கல், ஜூன் 4-நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 21.18 லட்சம் மானியத்தில் 101 விவசாயிகளுக்கு மழைத் தூவி கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் (பொ) கோ.செங்குட்டுவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை வளர்ப்போர் தீவனப் பயிர் வளர்க்கவும், உற்பத்திச் செலவினை குறைக்கவும், வருவாயை பெருக்கவும் திட்டமிட்டு அதற்காக நீர்பாசன மேலாண்மையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு மழைத் தூவி கருவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதற்காக 2011-12ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் 101 மழைத் தூவி கருவிகள் நிறுவ உத்தரவு பெறப்பட்டு 36 சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்தில் ரூ.9 லட்சத்துக்கும், 65 இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்தில் ரூ.12 லட்சத்து 18 ஆயிரத்து 750-க்கும் மழைத் தூவி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.இதன் மூலம் கோடை காலத்தில் குறைந்த தண்ணீர் செலவில், கால்நடைகளுக்குத் தேவையான பசுந் தீவனத்தை தடையின்றி சாகுபடி செய்ய முடிவதுடன், இதர பயிர்களுக்கும் தண்ணீர் அளிக்க முடிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இத் திட்டத்தின் கீழ் நிகழாண்டு ஒதுக்கீட்டின் கீழ் மானிய விலையில் மழைத் தூவி கருவிகள் நிறுவி விவசாயிகள் பயன்பெறுமாறு அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: