ஸ்பெயின் அல்லது ஜெர்மனி வெல்லக்கூடும்
ஈரோ 2012 கால்பந்து கோப்பையை நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அல்லது 2008ல் இரண்டாம் இடம்பிடித்த ஜெர்மனி வெல்லக்கூடும் என்று ஐரோப்பிய கால்பந்து அமைப்புகள் ஒன்றியத் தலைவர் மைக்கேல் பிளாட்டினி ஆரூடம் கூறியுள்ளார். ஜுன் 8 அன்று ஈரோ போட்டிகள் தொடங்க உள்ளன. அதற்கு முன்பாக உக்ரைனிலும் போலந்திலும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. நிறவெறி மற்றும் அனுமதிச் சீட்டு விற்பனைக் குறைவும் பிளாட்டினியை உறுத்துகின்றன.

மகளிர் அணிக்கு 8 பதக்கங்கள்
ஆசிய இளையோர் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற மகளிர் அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் உள்ளிட்டு எட்டுப்பதக்கங்களை வென்று திரும்பியுள்ளது. கஜகஸ்தானில் நடைபெற்ற போட்டிக்கு மகளிர் அணி கிளம்பும் முன் பயிற்சியாளர் ஒருவர் மீது அணியினர் பாலியல் புகார் கூறியிருந்தனர். 44 கி, 63கி எடைப்பிரிவில் இந்து சௌதாரி, சாக்சி மாலிக் ஆகியோர் தங்கம் வென்றனர். 59கி எடைப்பிரிவில் பூஜா தண்டா வெள்ளியைப் பெற்றார். லலிதா (51கி), ரிட்டு மாலிக் (55கி), சீமா (67கி), ரூபி சௌதாரி(48கி), கிரண்(72கி) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். பாலியல் புகார் குறித்து விசாரிக்க விளையாட்டு ஆணையம் ஒரு குழுவை நியமித்துள்ளது என்று ஆணையத்தின் தலைமை இயக்குநர் தேஷ் தீபக் வர்மா கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.