வெள்ளிக் கோள் நிலையை வைத்து தான் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு கண்டுபிடிக்கப்பட்டது என்ற வியப்பான செய்தியினூடே வெள்ளி இடைமறிப்பைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா? நம் தலைக்கு மேல் வானம் ஆயிரமாயிரம் அதிச யங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு உருவத்தில் வெண் மேகங்கள் ஒவ்வொரு உருவமாய் மாறி மாறி காட்சி அளிக்கும்; அதைக் கண்டு மெய் சிலிர்க்கும். மேகங்களின் மோதல்தான் இடி, மின்னல் என அறிவியல் சொன்னாலும், அர்ச்சுனன் தணுசு தொடுத்த ஒலிதான் என பாட்டி சொன்ன கதையே மண்டையில் குடையும். இந்த மூடநம்பிக்கையை மூலத மாக்கிக்கொண்ட ஜோதிடஸ்ரீக்கள் கிளப்பி விடும் பீதிக்கு அளவே இல்லை.
அதே போல் இந்த வெள்ளி இடை மறிப்புக்கும் கதைகள், பயங் கள், பரிகார விரதங்கள் எல்லாம் உண்டு!சூரியனுக்கும், சந்திரனுக்கும் அடுத்தபடி யாக வானத்தில் பிரகாசமாகத் தெரிவது வெள்ளி. வெள்ளி முளைத்த பிறகே முன்பு வயலில் நீர் பாய்ச்ச அதிகாலையில் விவ சாயிகள் செல்வார்கள். பலர் அதை ஒரு நட் சத்திரம் என்று வருணித்தாலும் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருந்து அது ஒளிர்வதால் நட்சத்திரம் போல் காட்சியளிக் கிறது. இந்த கோள் சில மாதம் காலையிலும், சில மாதம் மாலையிலும் தெரியும். விடி காலையில் தெரிவதை விடிவெள்ளி என்றும், அந்திசாயும் வேளையில் தெரிவதை அந்தி மீன் என்றும் சொல்வார்கள்.பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நேர்க் கோட்டில் சந்திரன் வந்தால் அது சூரிய மறைப்பு (கிரகணம்). அதேபோல் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே புதன், வெள்ளி போன்ற கோள்கள் வந்தால் அது இடை மறிப்பு அல்லது இடைநகர்வு. ஏனெனில், பூமிக்கு சிறிது தொலைவிலேயே சந்திரன் இருக்குது. அங்கேயிருந்து நெடுந்தொலை வில் சூரியன் இருக்கிறது, அப்போது சந்தி ரன் சூரியனை முற்றிலுமாக மறைக்கிற மாதிரி தெரியும் ஆகவே, அதை சூரிய மறைப்பு என்று சொல்கிறோம். வெள்ளிக் கோள் பூமியிலிருந்து 6.8 கோடி மைல் தூரத்தில் 3டிகிரி சாய்வாக இருக்குகிறது. அதனால அது சூரியனை மறைக்காது. சூரியனில் ஒரு ஓரமாக கருப்புப் புள்ளி போல நகர்ந்து போய்விடும். அதனால், இதை வெள்ளி இடைமறிப்பு, இடை நகர்வு என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த இடைமறிப்பு நிகழ்வை கணக்கிட்டுதான் பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரத்தைத் துல்லியமாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்.ஒரு நூற்றாண்டில் இது இரண்டு முறை மட்டுமே நடக்கும். இந்த நூற்றாண்டுல 2004ம் ஆண்டு இப்படி ஒரு இடை நகர்வு நடந்தது. 8 ஆண்டுகளிலேயே நாளை (ஜூன்6) நடக்க இருக்கிறது. மறுபடியும் 105.5, 121.5 வருட இடைவெளியில்தான் மறுபடியும் இப்படி நடக்கும். இதற்கு முன் 1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 ஆண்டுகளில் வெள்ளி இடைமறிப்பு நடந்திருக்கிறது. டிசம்பர், ஜூன் மாதங்களில்தான் இது நடக் கிறது. இனி 2117 வருடஷமும், 2125வது வரு ஷமும் இதுமாதிரி நடக்கும். அப்போதுதான் பார்க்க முடியும் – அதாவது அப்போது இருப் பவர்கள்! எனவே நாளைய வாய்ப்பைப் பயன்படுத்தி இப்போதே வெள்ளி இடை மறிப்பைப் பார்த்துவிடுவோம்.
ஜூன் 6 காலை 3.40 மணிக்கு வெள்ளி இந்நிகழ்வு தொடங்கும். ஆனால், தமிழ்நாட் டில் காலை 5.40 மணிக்குதான் விடிய ஆரம் பிக்கும். அப்போதுதிருந்து 10.20 மணி வரை பார்க்க முடியும். ஒரு முக்கியமான விஷயம், காண கிடைக்காத ஒன்று என்ற ஆர்வ மிகுதியில் வெறுங்கண்ணால சூரியனைப் பார்த்தால் பார்வைத்திறன் பாதிக்கப்படக் கூடிய அபாயம் உண்டு. பொதுவாகவே சூரியனை வெறுங்கண்ணால் நேருக்கு நேரா கப் பார்க்கக் கூடாது. இடைமறிப்பு நடக்கிற சமயத்துலயும் வெறுங்கண்ணால சூரியனைப் பார்க்க கூடாது. பைனாகுலர், டெலஸ்கோப் மூலமாகவும் பார்க்கக் கூடாது. கலர் பிலிம், கூலிங் கிளாஸ், எக்ஸ்ரே பிலிம் மூலமாகவும் பார்க்க கூடாது.வெல்டிங் செய்கிறவர்கள் பயன்படுத்துகிற 14ம் எண் கொண்ட அடர் கண்ணாடி வழி யாகவோ, சூரிய வடிகட்டிக் கண்ணாடிகளை அணிந்தோ பார்க்கலாம். டெலஸ்கோப் அல்லது பைனாக்குலர் வழியாக சூரியனை நிழலான பகுதியில் பிரதிபலிக்கச் செய்து பார்க்கலாம். ஊசித் துளை கேமரா வழியாக சூரியனின் ஒளிக்கதிரைப் பிடித்துப் பார்க்க லாம். இப்படியெல்லாம் பார்க்க நேரமில் லையா.. கவலை வேண்டாம்…இந்த அரிய நிகழ்வைப் பார்க்க தமிழக அரசு சென்னை பிர்லா கோளரங்கத்திலே யும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகிலே யும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதுதவிர தமிழ்நாடு முழுக்க அறிவியல் இயக்கம் சார் பாக 600 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய் திருக்கிறார்கள். அங்கே போய் எளிதாகப் பார்க்கலாம். இது தவிர அந்தந்த ஊர்ல இருக் கிற லோக்கல் கேபிள் டிவி சேனல்களில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.கடலோரமாக உள்ள காஞ்சிபுரம், கட லூர், நாகை, குமரி ஆகிய இடங்களிலேயும் பெரும் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். அறி வியல் இயக்கம் சார்பாக 10 ஆயிரம் ஆசி ரியர்களுக்குப் பயிற்சி கொடுத்து பள்ளிக் குழந்தைகளுக்கு இந்நிகழ்வைக் காண்பிக்க வும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.அறிவியல் தெளிவோடு வெள்ளி இடை மறிப்பைக் கண்டால் ரசிக்கலாம், வானியல் புதிர்களைப் புரிந்துகொள்ளலாம். ஜோதிட சிகமணிகளும், கழிப்பு கழிக்கிற மந்திரவாதி களும், குறி சொல்கிறவர்களும் கூறுகிற கதைகளையும் சடங்குகளையும் பின்பற்றி னால் அச்சம் மட்டுமே மிஞ்சும். அந்த அச்சத் தைத் தடுக்க சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பல பெண்கள் இந்த வெள்ளி நகர்வை வரவேற்று வழியனுப்பும் வகையில் வெள்ளித் திருவிழா கொண்டாடுகிறார்கள். அச்சத் தின் சடங்கில் சிக்குவதை விட இந்த அறிவி யல் கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ லாமே…
– செ. கவாஸ்கர்தகவல்கள் ஆதாரம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

Leave A Reply

%d bloggers like this: