கோவை, ஜூன் 4-விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர்.கோவையில் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுகிறதா என கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அந்தந்த பகுதி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் வாகன ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வரி கட்டாமல் இயக்கப்பட்ட ஒரு லாரி, ஒரு கிரேன், 3 மினி லாரி மற்றும் 24 என்சிபி சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ. 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

Leave A Reply