புதுதில்லி, ஜூன் 4- தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வயதான தாயா ருக்கு மகன் பராமரிப்புச் செலவை தராதது தொடர்பான வழக்கு விசா ரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு திங் கட்கிழமை அளிக்கப்பட்டது. இதன்படி மாதம் ரூ.800 பராமரிப் புச் செலவை தாயாருக்கு மகன் தர வேண்டுமென உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு அளித்த கூடுதல் அமர்வு நீதிபதி சவீதாராவ் கூறுகையில், தாயாருக்கு மாதம் ரூ.800 பராமரிப்புச் செலவுக்கு அளிக்க வேண்டும் என்ற விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. எனவே, இந்த தொகையை குறிப்பிட்ட நபர் அளிக்க வேண்டும் என்றார். பெற்றெடுத்த தாயை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பை அந்த நபர் புரிந்து கொள்ளவில்லை. தனது வருமானத்தில் ஒரு பகுதியைக் கூட தாயாருக்கு தர அந்த நபர் விரும்பவில்லை. தன் னிடம் இருந்து பணம் பறிக்க மிரட்டுவதாக தாய் மீது மகன் எல்லை மீறி குற்றம் சாட்டுகிறார். இந்த குற்றச்சாட்டு மூலம், மனிதநேயமே இல்லாத தன்மையை காட்டுகிறது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். தாய் மீது அந்த நபர் இப்படி குற்றம் சாட்டுவது வெட்கக் கேடானது என்றும் தாயை பராமரிக்க பணம் தராத மகனின் செயலை, நீதிபதி கண்டித்தார். தாயாரின் பராமரிப்புச் செலவுக்கு அவரும் அவரது சகோதரரும் மாதம் ரூ.800 தர வேண்டும் என மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மகன் அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்த போதும் அந்த நபர் தாயா ருக்கு பணம் அளிக்க மறுத்தார். நோய்களுடன் அவதிப்படும் மனைவி மற்றும் திருமண வயதில் உள்ள மகள் உள்பட 3 குழந்தைகளை பராமரிக்க வேண்டி உள்ளது என அந்த நபர் வாதாடினார். அவரின் இந்த வேண்டுகோளை நீதிமன்றம் நிரா கரித்தது. தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு இருந்தாலும் தனது தாயாரை கவனிக்கும் கடமையில் இருந்து விலக முடியாது என்று தெரிவித்தது.

Leave A Reply

%d bloggers like this: