இம்பால், ஜூன் 4 -தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர் கலகக்கும் பல் முகாம்களை மூடுவதற்கு, ஜூன் 10ம்தேதி காலக்கெடு விதித்திருந்த நிலையில், அந்த நடவடிக்கைக்காக வட கிழக்கு மாநிலங்கள் காத் திருக்கின்றன.இந்த நிலையில் அசாம் ரைபிள் மற்றும் இதர பாதுகாப் புப் படையினர் வடகிழக்கு தீவிரவாதிகள் எல்லை மாநி லங்களான மணிப்பூர், மேகா லயா, நாகாலாந்து, அருணா சலப்பிரதேசங்களில் வரு வதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளன. தங்கள் பகுதி களில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை மூடிவிடுவதற்கு, மியான்மர் அரசு விதித்த கெடு, ஜூன் 10ம்தேதி முடிவடையும் நிலையில், பாதுகாப்பு நடவடிக் கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அசாம் ரைபி ளின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (தெற்கு) மேஜர் ஜெனரல் யு.கே. குருங் தெரிவித்தார்.360 கி.மீ. நீளம் உள்ள மணிப்பூர் – மியான்மர் எல் லைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க கூடு தல் படை பிரிவுகள் ஈடுபடுத் தப்பட்டுள்ளன. இந்த படைப் பிரிவுகள் கலககும்பலை ஒடுக்குவதற்கு விசேஷ பயிற்சிபெற்றதுக்கும் இந்த அசாம் ரைபிள் படைபிரிவு, தற் போதுள்ள எல்லை பாதுகாப்பு படை பிரிவினருக்கு எதிராக, எல்லைப் பகுதிகளில் பாது காப்பு பணியில் ஈடுபடுகிறார் கள். மோர்க் பகுதியில் 10கி.மீ. நீள எல்லை வேலி அமைக் கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதி வர்த்தகம், சட்டப்பூர்வ மாக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் கைதிகள், தீவிர வாதிகள், கொலைகள், போதை மருந்துகள் சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் ஆகிய தகவல்களும் வருகின்றன.பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில் மியான்மருக்கு மேற்கொண்ட பயணத்தில் அந்நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் ஜூன் 10ம்தேதி யில் மூடப்பட்டுவிடும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.கலகக் கும்பலை ஒடுக்கும் புதிய கொள்கை குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: