புதுக்கோட்டை, ஜூன் 4- கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சரான ஜெய லலிதா, மாற்றம் தந்த மக் களுக்கு ஏற்றம் தருவோம் எனச் சொன்னார். அது விலையேற்றம்தான் என்பது இப்பொழுதுதான் புரிகிறது என்றார் நாகை மாலி எம்எல்ஏ.புதுக்கோட்டைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் என்.ஜாகீர் உசேனை ஆதரித்து மார்க் சிஸ்ட் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற் கொண்டு வருகின்றனர். திங்கள் கிழமையன்று புதுக் கோட்டை ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் வாக்குகள் கேட்டு பிரச்சா ரம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ நாகை மாலி மேலும் பேசியதாவது:தார்மீக அடிப்படை யில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத் திருக்க வேண்டிய இத்தொகு தியில் தோழர் முத்துக்கும ரன் மறைந்த சுவடு மறை வதற்குள் தேர்தல் வேலை களில் இறங்கிவிட்டது அதிமுக. இந்த ஆட்சியின் ஓராண்டு சாதனையை விட மக்களுக்குத் தந்த வேத னைகளே அதிகம். மிக்சி, கிரைண்டர் கொடுத்ததை யெல்லாம் சாதனையாகச் சொல்ல முடியாது. அரசு கஜானாவிலிருந்து பணத் தை செலவழித்து விளம் பரம் தேடிக்கொள்ளும் உத்திதான் இது.
இந்த ஆட்சியின் சாத னையாகச் சொல்ல வேண்டு மானால் ஆண்டுக்கு ஆண்டு குடிகாரர்களை ஊக்கப் படுத்தி, அவர்களின் எண் ணிக்கையை அதிகப்படுத்தி இருப்பதுதான். இதன் மூலம் ஆண்டுக்கு 18 ஆயி ரம் கோடிக்கும் அதிகமாக அரசு வருமானம் பார்க் கிறது. மேலும், பேருந்து, பால், மின்சாரக் கட்டணங் களை பல மடங்கு உயர்த்தி மக்களை கடுமையான துன் பத்திற்கு ஆளாக்கி இருக் கிறது. அரசு அறிவித்துள்ள விலையில்லாத் திட்டங் களோடு ஒப்பிடும்போது இவர்கள் மக்களுக்குச் செய் ததைவிட, அவர்களிட மிருந்து பறித்ததே அதிகம்.மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தருவோம் என ஆட் சிக்கு வந்ததும் சொன் னார்கள். இப்பொழுதுதான் புரிகிறது. தாங்கள் ஏற்றப் போகிற விலைவாசி உயர்வு களைத்தான் அப்படிக் கூறி யிருக்கிறார்கள்.தேமுதிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு ஆதிமுகவிற்கு கிடைத்திருக்காவிட்டாhல் இவர்கள் ஆட்சியை கன விலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. இவர்கள் ஆகாயத்தி லிருந்து குதித்து வந்ததைப் போல அகந்தையில் ஆட்சி நடத்துகிறார்கள். மக்கள் வாக்களித்துத்தான் ஆட்சிக்கு வந்தோம் என்ற சிந்தனையே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். இந்த இடைத்தேர்தலின் மூலமாக வாக்காளர்களா கிய நீங்கள் இந்த மக்கள் விரோத அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். தொடர்ந்து மக்கள் நலனுக்காக சட்டமன்றத் திலும் மக்கள் மன்றத்திலும் குரல் கொடுத்து வரும் தேமுதிக-மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாள ராகப் போட்டியிடும் என். ஜாகீர்உசேனை பெருவாரி யான வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனப் பேசினார்.பிரச்சாரப் பயணத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.செபஸ் தியான், எஸ்.சங்கர், எஸ். பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலாளர் எம்.ராமசாமி, தேமுதிக ஒன்றியச் செயலா ளர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.புதுக்கோட்டை ஒன் றியம் தர்ஹாவில் துவங்கி, புத்தாம்பூர், மாத்தூர், மங் களத்துப்பட்டி, மாந்தாங் குடி, கம்மங்காடு, மண விடுதி, வாராப்பூர், தொண் டைமான்ஊரனி, குப்பை யன்பட்டி, வண்ணாரப் பட்டி, ஆதனக்கோட்டை உள்ளிட்ட ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற பிரச்சாரம் இறுதியாக முள்ளூரில் நிறைவடைந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.