மக்களின் அன்றாட உணவில் சாக்லேட். ஐஸ்கிரிம், கேக், டீ, காபி போன்ற அனைத்தும் இன்றியமையாத உணவுப்பொருளாக மாறிவருகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு உணவுவகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வதால் உடலுக்குள் அதிக கலோரிகள் கிடைக்கிறது. இதன் விளைவாக உடல்பருமன், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. சர்க்கரை நமது உடலுக்கு அதிக சக்திகளை அழிப்பதோடு சர்க்கரையின் அளவு அதிகமாக எடுத்துக்கொள்வதால் உடல்பருமன் போன்ற உபாதைகளையும் உண்டாக்குகிறது என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குழந்தைகளைப் பொருத்தமட்டில் உடல்பருமன் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அது தவிர உளவியல் ரீதியான பிரச்சனைகளும், மார்பகப்புற்றுநோய், கருமுட்டையில் உற்பத்தி பாதிப்பு போன்றவைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அதிலும் பெண்குழந்தைகளுக்கு அதிக சிக்கல்கள் ஏற்படுகின்றன. பெண் குழந்தைகளுக்கு செக்ஸ் ஹர்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகரிப்பதனால் பெண்குழந்தைகளின் உடல் உறுப்புகளின் வளர்ச்சி அதிகரிக்கிறதோடு மட்டும் அல்லாமல் சரியான வயதாகியும் குழந்தை பிறப்பு ஏற்படுவதை தடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Leave A Reply