பெட்ரோல் விலை உயர்வு பேரிடியாக மக்கள் தலையில் விழுந்துள்ளது; உரமானியம் ரத்து செய்யப்பட்டதால் விவசாயம் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெரும் முதலாளிகளுக்கு மட்டும் சலுகை வாரி வழங்கப்படுகிறது.நாசகர பொருளாதார கொள்கைகளை அம லாக்கிவரும் காங்கிரஸ் – திமுக பங்கேற் றுள்ள மத்திய அரசை மக்கள் மன்னிக்கமாட் டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். தென்காசியில் கடந்த 2ம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:சில தினங்களுக்கு முன்பு மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மாலை அணிவித்து பாராட்டியது. அதாவது, ஐ.மு.கூட்டணி அர சின் 3 ஆண்டு நிறைவு விழாவை பாராட்டி னார்கள். பிறகு மக்களுக்கு அளித்த பரிசு, பெட் ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்வு. வர லாறு காணாத அளவுக்கு உயர்த்தியதால், கண்டிக்காத கட்சிகளே இல்லை. எதிர்ப்பு தெரிவிக்காத அமைப்பே இல்லை. நாடு முழு வதும் கொந்தளித்தது. மே-31 ல் இமயம் முதல் குமரி வரை முழு அடைப்பு போராட்டம் நடை பெற்றது. அதன் பிறகு 2 ரூபாய் குறைத்துள்ளது.
ரூபாய் மதிப்பு குறையயார் காரணம்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல் விலையை உயர்த்தவில்லை. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் பெட்ரோல் விலையை உயர்த்தினார்களாம். பெட்ரோலை மாணவர்கள் முதல் சாதாரண ஏழைகள் வரை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிறிய வர்த்தகர் டி.வி.எஸ் 50-தான் வைத்திருப்பார்.அதில்தான் ஊர் ஊராய் சென்று வியாபாரம் செய்வார். கணவர் வண்டி ஓட்டினால் மனைவி பின்னாலும், குழந்தை முன்னாலும் அமர்ந்து செல்வார்கள். அதற்கும் தற்போது இடி விழுந்தது போல் பெட் ரோல் விலை உயர்ந்து விட்டது. ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.45,46 லிருந்து 56 ஐ தொட்டுவிட்டது. ரூபாய் மதிப்பு குறைய யார் காரணம் ? மக்கள் தான் காரணமா?உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களை இறக்குமதி செய்ததும், இறக்குமதியை அதி கப்படுத்தியதும்தான் காரணம். இதனால் அந் நியச் செலாவணி மதிப்பு அதிகமாகி ரூபாயின் மதிப்பு குறைந்து போனது. மன்மோகன் சிங் கும், ப.சிதம்பரமும் பொருளாதாரப் புலிகள் என கூறுகின்றனர். தவறான கொள்கைகளை கடைப்பிடிப்பதால் தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.
காங். – பிஜேபி ஒரே கொள்கை
1996 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார். தற்போது பிரதமராக உள்ளார். நவீன தாராளமயக் கொள்கை உருவாக காரணமாக இருந்தார். மத்திய திட்டக் குழு துணைத் தலைவரான மாண்டேக்சிங் அலுவாலியா, பிஜேபி ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும் அதே பதவியில் இருந்தார். தற் போதும் அந்த பதவியில் தொடர்கிறார். இதற்கு காரணம் என்ன ? 2 கட்சிகளும் ஒரே பொரு ளாதாரக் கொள்கையை கடைப்பிடிக்கின்றன. நாசகர பொருளாதாரக் கொள்கை காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் மட்டு மல்ல, இந்தியாவின் பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்துவிட்டது.
பெருமுதலாளிகளுக்கு சலுகை
பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பாதிப் படையவில்லை. பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 59, சீனாவில் ரூ.37.50, அமெ ரிக்காவில் வெறும் ரூ.39.60 தான். இந்தியாவில் மட்டும் 76 ரூபாய், ஏன்? பெட்ரோல் மீது மத்திய, மாநில அரசுகள் வரிகளை போட்டுள்ளன. வரிகளை குறைத் தாலே போதும். மத்திய அரசு கடைப்பிடிக்கும் நாசகர பொருளாதார கொள்கையால் தான் விலை உயர்வு. பன்னாட்டு கம்பெனிகள், ரிலையன்ஸ் போன்ற இந்திய கம்பெனி களுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.3.68 லட்சம் கோடி மானியமாக மத்திய அரசு கொடுத் துள்ளது. 1991 முதல் 2011 வரை 20 ஆண்டு களில் பன்னாட்டு, உள்நாட்டு கம்பெனி களுக்கு மானியமாக ரூ. 21 லட்சம் கோடி சலுகையாக அள்ளித் தந்துள்ளனர். டீசலுக்கு மானியம் தர மத்திய அரசு முன் வராது. ஏழை களுக்கு தர முன் வராது. பெரும் முதலாளி களுக்கு மட்டும் ரூ. 21 லட்சம் கோடி தர என்ன காரணம்?
கைதூக்கி ஆதரிக்கும் திமுக
திமுக தலைவர் கலைஞர் மத்திய அரசில் அங்கம் வகித்துள்ளார். சென்னையில் பெட் ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அதில் அவர் பேசும் போது, விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். அல்லது ஆதரவை வாபஸ் பெற வேண்டி வரும் என்றார். பிறகு, அண்ணா அறிவாலயத் திற்கு சென்றதும், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. பெட்ரோல் விலை உயர் வுக்கு எதிராகத்தான் என்கிறார். இதில் எதா வது புரிகிறதா? ஆதரவை வாபஸ் வாங்கி னால் மதவாத கட்சிகள் ஆட்சிக்கு வந்து விடும் என்கிறார். உங்களது திருக்குமரன் மு.க. அழகரி உரத்துறை அமைச்சராக மத்தியிலே உள்ளார். நடப்பு பட்ஜெட்டில் ரூ 6 ஆயிரம் கோடி உரத்திற்கான மானியம் ரத்து செய்யப் பட்டது. இது விவசாயத்தை பாதிக்காதா? விவ சாயத் தொழிலாளர்களை பாதிக்காதா? எல்லா முடிவுகளுக்கும் மத்திய அமைச்சரவையில் கையை தூக்கி விடுகிறார்.பெட்ரோல் விலையை திமுக எதிர்ப்பது உண்மை என்றால், மத்திய அரசில் இருந்து விலக வேண்டும்.
மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
2010ம் ஆண்டு கோவையில் தமிழ்ச்செம் மொழி மாநாடு நடந்தது. அப்போது பாதியில் மு.க.அழகிரி தில்லி சென்றார். அங்கு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண் டார். அதில் அந்தந்த கம்பெனிகளே பெட்ரோல் விலையை தீர்மானிக்கலாம் என முடிவு செய்தனர். நெல் உற்பத்தி செய்யும் விவசாயி நெல்லுக்கான விலையை தீர்மானிக்க முடி யாது. கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயி கரும் புக்கான விலையை தீர்மானிக்க முடியாது. ஆனால், பெட்ரோல் கம்பெனிகள் மட்டும் நினைத் தால் விலையை உயர்த்தும்.இது என்ன கொள்கை முடிவு. காங்கிரஸ்-திமுக தலைவர்களை மக் கள் மன்னிக்க மாட்டார்கள்.தற்போது, கல்வி கடைச் சரக்காக மாறி விட்டது. என்ஜினியரிங் படிக்க ரூ. 4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வேண்டும். தனியார் சுயநிதி, மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் ஏராளமாக பணம் கேட்கின்றன. கடந்த மே-22ல் பிளஸ் 2 முடிவு வெளியானது.ஜூலை 9 ம் தேதி கவுன்சிலிங். ஆனால், அதற்குள் சுயநிதி கல் லூரிகளில் சேர்க்கை முடிந்து விட்டது என் கின்றனர். எப்படி மாணவர் சேர்க்கை நடத்த முடியும். ஏழைகள், தலித்துகள், பிற்பட்டோர் இனி உயர் கல்வி கற்க முடியாது. மத்திய அரசு இந்தியாவில் வெளி நாட்டு பல்கலைக் கழகங் களை கொண்டு வர முயற்சி செய்கிறது. கலை ஞரும், திமுக நண்பர்களும் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? மத்திய அரசின் நவீன தாராளமய கொள்கையால் தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களும் பாதித்துள்ளனர்.
பால் விலை உயர்வுபஸ் கட்டண உயர்வு
தமிழகத்தில் அதிமுக அரசு ஓராண்டு ச் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய் கிறது. விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்குவதை வரவேற்கிறோம். அதே சமயத்தில் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வை ஏற்க முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏறிய விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தலின் போது தெரிவித்தார். விலை வாசி உயர்வை கட் டுப்படுத்த முடியாவிட்டாலும் தடுக்க முடி யாதா, பால் விலை, மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டணம் உயர்ந்தால் மற்ற பொருட் கள் விலை உயராதா?
சட்டம்-ஒழுங்கு படும்பாடு
தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற போது, சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும் என தமிழக முதல்வர் கூறினார். 2 மாதத்திற்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் நம்பியாற்றில் மணல் கொள்ளையை தடுத்த சதீஷ்(21) என்ற இளைஞர் மணல் கொள்ளையர்களால் லாரியை வைத்து ஏற்றி கொல்லப்பட்டார். லாரியின் உரி மையாளர் அதிமுக ஊராட்சி ஒன்றிய பொறுப் பாளர். லாரி ஓட்டுநர் அதிமுகவைச் சேர்ந்த வர். கொலை செய்தவர்களை டி.எஸ்.பி சாதா ரண ஜாமீனில் வெளியே விட்டார். 302 சட்டப் பிரிவு கொலை வழக்கில் போலீஸ் ஜாமீனில் விட முடியுமா? கடந்த திமுக ஆட்சியில் மணல் கொள்ளையை தடுத்த தாசில்தார் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். தூத்துக்குடியில் தெய்வச் செயல்புரத்தில் 915 ஏக்கர் விவசாயிகளின் நிலத்தை மோசடி செய்தார். அதிமுக ஊராட்சி ஒன்றிய தலைவர். இவரோடு திமுக வழக்கறிஞரும் சேர்ந்து பல லட்சத்திற்கு விற்க முயற்சி செய்தனர். அதை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கனகராஜ் தடுத்தார். அதற்காக அவரது வீட் டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். கோவில் பட்டியில் ஹாக்கி மைதானம் பொதுவான தாகும். அதை விற்க நில மோசடிக்கும்பல் முயற்சி செய்தது. அதை அவர் தடுத்து நிறுத் தினார். அவர் வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டு வீச்சு. இதுகுறித்து பாலபாரதி எம். எல்.ஏ சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அப்போது தமிழக முதல்வர் 1 மாதத்தில் நட வடிக்கை எடுக்கப்படும் என்றார். இன்னும் நடவடிக்கை இல்லையே!
புதுக்கோட்டை இடைத்தேர்தல்
புதுக்கோட்டையில் வரும் 12ம் தேதி தேர்தல் நடக்கிறது.ஒரு சட்டமன்ற உறுப் பினர் இறந்து விட்டால் அவர் சார்ந்த கட்சிக்கு அந்த தொகுதியை வழங்குவது தான் மரபு. ஆனால் அதிமுக வேட்பாளரை அறிவித்தது. திமுக நேர்மையாக தேர்தல் நடைபெறாது எனவே, தேர்தலை புறக்கணிக்கிறோம் என கூறிவிட்டனர். மதிமுக உள்ளிட்ட பல கட்சிகளும் இவ்வாறே அறிவித்து விட்டனர். கடந்த ஆட்சியின் போது தொண்டாமுத்தூர், பர்கூர் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத் தேர் தல் நடைபெற்ற போது அதிமுக இதேபோல் தான் தேர்தலை புறக்கணித்தது. அப்போது மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யுடன் தேர்தலை சந்தித்தது. தற்போது தேமு திக விற்கு ஆதரிப்போம் என கூறியுள்ளோம். திருமங்கலம் பார்முலா, சங்கரன் கோவில் பார்முலா என எந்த பார்முலாவாக இருந் தாலும் தேர்தலை புறக்கணிக்க மாட்டோம்.இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.