புதுக்கோட்டை ஜூன் 4-இடைத்தேர்தல் நடக் கும் புதுக்கோட்டையில் இரவோடு இரவாக வேட்டி சேலைகள்; வினியோகம் செய்யப்பட்டிருக்கிறது. கண்கொத்திப்பாம்பாக பணியாற்றுவதாக பீற்றிக் கொள்ளும் தேர்தல் ஆணையத்தால் இதைத் தடுக்க முடியவில்லை என்ப தோடு, யார் இதை செய் தார்கள் என்பதும் தெரிய வில்லை எனவும் கையை விரிக்கிறது.கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்தி தேர்தல் விதிமீறல்களை கட்டுப்படுத்தி வருவதாக தேர்தல் ஆணையம் கூறு கிறது. ஆங்காங்கே சோத னைச் சாவடிகள் என்னும் பெயரில் சாமானிய மக்க ளையும், சிறு வியாபாரி களையும் பழிவாங்குவதே மிச்சமாக இருக்கிறது.இந்நிலையில் புதுக் கோட்டை நகரம் 11, 12வது வார்டுகளுக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று இரவும், ஞாயிறன்று அதி காலையிலும் தெருத் தெருவாக பார்சலுடன் வந்த சிலர் வீடுகள் தோறும் தலா ஒரு வேட்டி – சேலை அடங்கிய பார்சலை போட்டுவிட்டுச் சென்றுள் ளனர்.காலையில் வீட்டுக் கதவை திறந்தவர்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சி யாகவும் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பறக்கும்படை மற்றும் கண் காணிப்புக் குழுக்களுக்கு தகவல் தரப்பட்டது. அவர் கள் நடத்திய விசாரணை யில் பார்சலைப் போட்டது யார் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறப் படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: