வஜிரிஸ்தான், ஜூன் 4-பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியிலுள்ள வஜிரிஸ்தானின் வடக்குப் பழங்குடியினப் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குத லில் 16 பேர் கொல்லப்பட் டனர்.பாகிஸ்தான் வடமேற்கு மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லோயைரப் பகுதியில் அமைந்துள்ளது வஜிரிஸ் தான். இங்கு கடந்த சில வருடங்களாக அமெரிக்கா வின் ஆளில்லா விமானம் ஏவுகனைத் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, தீவிரவாதிகளின் கூடாரங் களைத் தகர்க்கிறோம் என்ற பெயரில், அப்பாவி மக்க ளின் வீடுகளின் மீது, ஏவு கணைகளை வீசி நாசம் செய்து வருகிறது. இதனால், பல அப்பாவி மக்கள் கொல் லப்படுகின்றனர். இந்நிலையில் திங்க ளன்று அதிகாலை, மூன்றா வது தடவையாக, வஜிரிஸ் தானின் மிர் அலி எனும் பகுதியில் உள்ள குடியிருப் புகள் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானம் வீசிய இரண்டு ஏவுகணைகள் வீசியது. இதில், 16 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் படுகாய மடைந்தனர். கடந்த மூன்று நாட் களாக நடைபெற்ற இத்தாக் கதலில் மட்டும் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இப்பகுதியைச் சுற்றி நான்கு ஆளில்லா விமானங்கள் வட்டமிட்டுக் கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்தா ண்டு தொடக்கத்திலிருந்து, வஜிரிஸ்தான் பழங்குடி யினப் பகுதியில், அமெரிக் காவின் ஆளில்லா விமானங் கள் நடத்திய 20 ஏவுகணைத் தாக்குதல்களில் 150 ற்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ் தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்துவதற்குப் பதிலாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.உலக நாடுகளையே தன் னிடம் அடிபணிய வைக்க வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா பல்வேறு தாக்குதல்களை அத்துமீறி தொடுத்து வருகிறது. இதில், மிகவும் பாதிக்கப்படுவது, பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான், ஏமன், சோமாலியா போன்ற நாடுகள் தான். இப் பகுதிகளில் தீவிரவாதிகள் அதிகம் இருப்பதாகக் கூறி, அவர்களை அழிக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்கா பல்வேறு ஆளில்லா விமா னங்களை அனுப்பி குண்டு மழை பொழிந்து வருகிறது.இப்பகுதிகளில் கடந்த மாதத்தில் நடைபெற்ற தாக் குதல்களில் 72 மணிநேரத் தில் மட்டும் 31 பேர் பலி யாகியுள்ளனர். இந்த வான் வெளித்தாக்குதல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ்-ஷால் துவக்கப்பட்டது. ஆனால், மாற்றம் வேண்டும் என்றும் உலக நாடுகளிடையே அமைதியை நிலைநாட்டப் போகிறேன் என்ற பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் அமெரிக்காவின் ஜனாதி பதியான ஒபாமாவால் இத் தாக்குதல் அதிகரித்திருப்ப தாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: