மன்னார்குடி, ஜூன் 4-திருவாரூர் மாவட்டத் தில் தென்னை விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ளது பரவாக்கோட்டை.. இப்பகுதியில் ஏராளமாக தென்னை சாகுபடி நடை பெறுகின்றது.திருவாரூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க அமைப்புக் கூட்டம் பரவாக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத் திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜீ.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.தென்னை விவசாயிகள் சங்க மாநில பொதுச் செய லாளர் எஸ்.ஆர்.மதுசூத னன் சிறப்புரை நிகழ்த்தி னார். பின்னர் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்டத் தலை வராக என்.ஜி.முருகையன், மாவட்டச் செயலாளராக கே.சுப்பிரமணியன், பொரு ளாளராக ஆர்.சந்திரசேக ரன் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.பரவாக்கோட்டையில் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு மூலம் வாரம் ஒருமுறை தேங்காய் ஏலம் விடும் விற்பனை மையம் அமைக்க வேண்டும். பர வாக்கோட்டையில் கொப் பரை உற்பத்தி செய்திட உலர் களம் அமைத்திட வேண் டும்; தென்னை வளர்ச்சி மானியங்கள் சாதாரண விவசாயிகளுக்கும் கிடைத் திடும் வகையில், வேளா ண்மை அதிகாரிகள் நடவ டிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.நிறைவாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. சுப்பிரமணியன் நன்றி கூறி னார்.

Leave A Reply

%d bloggers like this: