அபுஜா, ஜூன் 4 -நைஜீரியா நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள லாகோஸ் நகரில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக் குள்ளானதில் அதிலிருந்த 153 பேரும் பலியாகினர்.நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் இருந்து பயணிகள், விமானிகள் என்று 153 பேருடன் தனியார் பயணிகள் விமானமான போயிங் எம்.டி. 3 லாகோஸூக்கு புறப் பட்டது. அந்த விமானம் பிற்பகல் 2.44 மணி அளவில் லாகோஸ் முர்தலா முகமது விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 153 பேருமே பலியாகினர்.விமானம் மோதிய இரண்டடுக்கு மாடி கட்டிடத்தின் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர். மீட்பு பணியை மேற்கொள்ள மக்கள் இடையூறாக இருந்ததால் அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். அதன் பிறகு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்த தகவல் அறிந்த நைஜீரிய அதிபர் குட்லக் ஜானதன் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு உத்தர விட்டுள்ளார்.விபத்துக்குள்ளான விமானம் டானா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமானது. நைஜீரியாவில் இயங்கும் டானா ஏர் நிறுவனம் ரமேஷ் ஹத்தி ரமணி என்ற இந்தி யருக்குச் சொந்தமானது. இவர் அந்நாட்டின் மருந்துப் பொருட்கள், பிளாஸ்டிக், ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட தொழில்களில் ஈடு பட்டுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தப்படும் என்று அந்த தனியார் விமான நிறு வனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: