சுரங்க ஊழலில் பல்லாயிரம் கோடிகளை விழுங்கியவர்களை பாதுகாப்பதற்கு நீதிபதியே துணை போயிருப்பது அனைவரையும் அதிர்ச் சிக்குள்ளாக்கியிருக்கிறது. மேலும் நீதிக்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா துவங்கி, அம்மாநில அமைச் சர்களாக இருந்த ஜனார்த்தனரெட்டி உள் ளிட்ட பலர் சுரங்க ஊழலில் சிக்கி, அமைச்சர் பதவி களை பறிகொடுத்து பரிதாபமாக நிற்கின்றனர். இந்நிலையில் இவர்களின் ஊழல் தோண்ட தோண்ட சுரங்கம் போல் சென்று கொண்டே இருந்ததைக் கண்டு சிபிஐயே அதிர்ச்சியுற்றது. ஆனாலும் இதையெல்லாம் செய்த முன்னாள் பாஜகவினர் எந்த வழக்கு களையும் பார்த்து அச ரவில்லை. இதுதான் வித்தியாசமான கட்சியோ என அனைவரும் வியப்புடனேயே பார்த்து வந்தனர்.இந்நிலையில், ஊழல் பணத்தில் ஒட்டுமொத்த நீதித்துறையையே விலை பேச முயன்றிருப் பதும், அதற்கு சில நீதிபதிகளும் விலை போயி ருப்பதும் தற்போது அம்பலமாகியிருக்கிறது.
ஊழல் என்பது தற்போது கார்ப்பரேட் மயமாகி நீதி, நிர்வாகம், அரசியல் என அனைத்து துறை களையும் உள்ளடக்கிய கூட்டுக் கொள்ளையாக மாறியிருக்கிறது. அதன் வெளிப்பாடே, தேசமே கவனித்து வரும் மிகப்பெரிய ஊழலில் கூட குற்றவாளிக்கு ஆதரவாக நீதிபதியே நிற்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. ஜனார்த்தன ரெட்டி ஜாமீனுக்கு ரூ.60 கோடி பேரம் பேசப்பட்டிருக்கிறது. இந்த பேரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர சட்ட அமைச்சர் பிரதாப்ரெட்டி, முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி சலபதிராவ், பி.ஜே.பி. எம்.எல்.ஏ.- சுரேஷ்பாபு, ஐதராபாத் ரவுடி யாதகிரி, தொழி லதிபர் சோமசேகரரெட்டி ஆகியோரின் கூட்டை யும் சிபிஐ கண்டறிந்திருக்கிறது. எதிரும் புதிரு மாக இருக்கும் காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஊழல் செய்வதில் மட்டும் ஒரே அணியாக கள மிறங்கியிருக்கிறது. இப்படி கார்ப்பரேட் மயமா கிப் போன ஊழலில் நீதித்துறையும் சிக்கி சீர ழிந்து வருவது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. அதுவும் ஊழல் குற்றவாளி ஜனார்த்தன ரெட்டி சிபிஐயிடமே, நான் இன்று வெளியே வந்து விடுவேன் என தகவல் சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் அந்த அளவிற்கு நீதித்துறைக் கும், கார்ப்பரேட் நிறுவன ஊழலுக்கும் உறவு பலப் பட்டு இருந்திருக்கிறது.
ஜாமீனில் ஜனார்த்தன ரெட் டியை வெளியே விடுவதற்கு சிபிஐ தரப்பில் தகுந்த ஆதாரத்துடன் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் அதையும் மீறி நீதிபதி பட்டாபி ராமாராவ் ஜாமீன் வழங்கியிருக்கிறார். இதுபோன்ற தன்மையில் ஊழல் வழக்குகள் விசாரிக்கப்பட்டால், முடிவில் அது நீதியின் தீர்ப் பாக இருக்காது. அது நிதியின் தீர்ப்பாகவே இருக்கும். கடைசியில், இதுபோன்ற தீர்ப்புகள் நீதிக்கே இழைக்கப்படும் அநீதியாகத்தான் இருக்கும். ஆகவே, இந்த தருணத்திலாவது மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்துவது போல், தேசிய நீதித்துறை ஆணையத்தை மத்திய அரசு உரு வாக்கிட வேண்டும். இதன் மூலம் நீதிபதிகள் நியமனம், மாற்றல், நீதிபதிகள் மீதான ஊழல்கள் குறித்து ஆய்வு செய்தல், நீதித்துறை துர்நடத்தை குறித்து வரும் புகார்களை விசாரித்தல் மற்றும் நீதித்துறையினரும் ஓர் அமைப்பிற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதை உத்தரவாதம் செய்திட முடியும். அதன் மூலமே நீதியை நிலை நாட்டமுடியும். அல்லது இன் றைய நவீன தாராளமயத்தின் ஆக்கிரமிப்பில் நீதித்துறையும் ஊழல் மயமாகி உருக்குலையும் நிலைக்கு தள் ளப்படும். ஆகவே நீதித்துறை ஆணையம் உரு வாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Leave A Reply

%d bloggers like this: