புதுதில்லி, ஜூன் 4-காங்கிரஸ் மற்றும் மத்திய அரசுக்கு எதி ராக பொய்த்தகவல்கள் பரப்பப்பட்டு வரு கின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார்.காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டிக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இக்கூட் டத்தில் மன்மோகன் சிங் பேசுகையில், எங் களைப் பற்றி பொய்யான தகவல்கள் பரப் பப்பட்டு வருகின்றன. தினமும் கறுப்புப் பணம் குறித்து அதிக அளவிலான தொகை ஒன்றை குறிப்பிடுகின்றனர். இதில் உண்மையில்லை எனத் தெரிவித்தார்.இதற்கு முன்னர் இல்லாத அளவில் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அமல் படுத்தியுள்ளோம். மேலும் அதிக அளவில் வளர்ச்சி விகிதத்தை கொண்டுவந்துள் ளோம் என அவர் புதிய தகவலை வெளியிட்டார்.எனினும் பொருளாதாரம் மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. இப் போது நாட்டுக்கும் நமது பொருளா தாரத்துக்கும் மிகவும் சிரமமான நேரம். நமது மன உறுதியை பரிசோதிக்க இதுவே சரி யான தருணம். நம்மீதே நமக்கு நம்பிக்கை வேண்டும் என பிரதமர் தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: