சென்னை, ஜூன் 4 –
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், மாநிலக்குழு உறுப்பின ராக செயல்பட்டவருமான தோழர் கே.பி.பாலச்சந்தரின் முதலாம் ஆண்டு நினைவு சொற்பொழிவு ஞாயிறன்று (ஜூன் 3) நடைபெற்றது.தமிழ் சூழலின் கவிதை உலகில் தனக்கென தனித்த முத்திரையை பதித்தவரும், “மனுசங்கடா நாங்க மனு சங்கடா…” என்று மனித உரிமைக்காக எழுச்சியோடு குரல் கொடுத்தவரும், தற் போதும் இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டும் படைப்பு களை தந்து வருபவருமான தோழர் இன்குலாப் சொற் பொழிவாற்றினார்.‘அகிம்சை தோற்கும் தருணங்களில்’ என்ற பொரு ளில் அவரது உரை அமைந் திருந்தது. அகிம்சை பற்றி காந்தி கூறியதில் தொடங்கி அகிம்சை என்பதன் உண் மையான பொருள் என்ன என்பதை ஆழமான புரித லோடு அவர் விளக்கினார்.வன்முறை என்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல் லையென்று பொதுவாக அனைத்து அரசியல் கட்சி களும் சொல்கின்றன. ஆனால், வன்முறை என்பது ஆயுதம் எடுப்பது மட்டு மல்ல. ஒடுக்கப்பட்ட மக் கள் உரிமைக்களுக்காக குரல் எழுப்பும்போது அதனை ஒடுக்க மேற்கொள்ளப்படும் செயல்களும் வன்முறை தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.ஆட்சியாளர்களுக்கு சகிப்பு தன்மை இல்லாதத தும், பிரச்சனையை வேறு பக்கம் திசை திருப்புவதும், தங்கள் விருப்பம் போல் கருத்துக்களை திரித்துக் கூறுவதும் கூட வன்முறை தான் என்று குறிப்பிட்ட இன்குலாப், பரமக்குடி துப்பாக்கி சூட்டில் ஆறு தலித்துக்கள் கொல்லப் பட்ட சம்பவம், அதன் பின் னணி, அதற்கு அரசு தரப் பில் முதலமைச்சர் கூறிய விளக்கம் ஆகியவற்றோடு வேறுசில உதாரணங்களை யும் கூறினார்.
வன்முறை என்பது புனைவு என்றால் அகிம்சை என்பதை கட்டுக்கதை என்று கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும், சில நிகழ் வுகள் மூலம் ஏற்படுகின் றன என்றும், எது அகிம்சை? எது வன்முறை என்பது பற்றி மறுசிந்தனை தேவை என்றும், இது பற்றி மனம் திறந்த விவாதத்தை உங்க ளிடம் எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.முன்னதாக கே.பி.பாலச் சந்தர் முதலாமாண்டு நினைவு சொற்பொழி வுக்கு தமுஎகச தென்சென்னை மாவட்டத் தலைவர் சைதை ஜெ. தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் கி.அன்பரசன் வரவேற்றார்.மாவட்ட துணைத் தலைவர் பேரா. காளீஸ்வ ரன் தமக்கும், கே.பி.பாலச் சந்திரனுக்கும் இடையே யான நெருக்கமான தோழ மையை நினைவு கூர்ந்தார். திரைப்படங்கள், குறும் படங்கள் போன்ற ஊடக பதிவுகள் மீது பாலச்சந்தி ரனுக்கு இருந்த ஈடுபாட் டையும், மக்கள் இயக்க மாக திரையிடல் மாற வேண்டும் என்ற அவரின் கனவை நனவாக்கும் வித மாக வரும் ஜூன் 16ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை தென்சென்னை மாவட் டத்தில் 60க்கும் அதிகமான இடங்களில் குறும்பங்கள், ஆவணப்படங்கள் திரையி டப்பட இருப்பதையும் காளீஸ்வரன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.