தஞ்சாவூர், ஜூன் 4-தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) சீ.சுரேஷ்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று (ஜூன் 4) நடைபெற்றது.இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை, கல்விக் கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சித் தலைவர் இம்மனுக்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட 3 பெண்களுக்கு விலையில்லா தையல் எந்திரம், சுயதொழில் செய்ய தன் விருப்ப கொடையிட மிருந்து ரூ.8 ஆயிரம், 11 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) சீ.சுரேஷ்குமார் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நடராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயராணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply