மதுரை,ஜூன் 4-மதுரையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள் ளும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முகாம் ஏற்பாடு செய்திருந்தது.மதுரை நெல்பேட்டையில் நடைபெற்ற இந்த முகாமிற்கு பொறுப்பாளர் ஹக்கீம் தலைமை வகித்தார். மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை முகாமைத் துவக்கி வைத்தார். 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பத்தாம் வகுப்பு முடிவுகளை கணினி மூலம் பிரிண்ட் எடுத்து வழங்கப்பட்டது. வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் வை.ஸ்டாலின், மாவட்டப்பொருளாளர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: