கோயம்புத்தூர், ஜூன் 4-பொருளாதாரம் தேக்கத்திலிருந் தால் மீண்டு வரமுடியும், பணவீக்கம் மட்டும் அதிகரித்தாலும் சமாளிக்க முடியும். ஆனால் இந்தியப் பொரு ளாதாரம் தற்போது தேக்கத்தையும் பணவீக்கத்தையும் சேர்ந்தே எதிர் கொள்கிறது. இதற்கு தீர்வு ஏதும் இல்லை. இதிலிருந்து மீண்டு வருவது கடினம் என்று பொருளாதார அறி ஞரும், கேரள முன்னாள் நிதியமைச் சருமான தாமஸ்ஐசக் பேசினார். கோவையில் நடந்து வரும் சிஐடியு அகில இந்தியப் பொதுக் குழுக் கூட்டத்தையொட்டி சிறப்புக் கருத்தரங்கம் ஞாயிறன்று நடந்தது. நஞ்சப்பாசாலை கைத்தறிக் கண் காட்சி மைதானத்தில் நடந்த இக் கருத்தரங்கிற்கு கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எம்பி தலைமை வகித்தார். இந்திய தொழில் வர்த்தக சபைத் தலைவர் டாக்டர் எம். கிருஷ்ணன் வரவேற் புரையாற்றினார். முன்னதாக உடு மலை துரையரசனின் இசை நிகழ்ச் சியுடன் கருத்தரங்கு துவங்கியது. இதில் “இருபதாண்டு கால தாராள மயக் கொள்கைகளின் வரவு செலவு” என்ற தலைப்பில் உரையாற் றிய தாமஸ்ஐசக் குறிப்பிட்டதாவது:
1991ல் ‘சரணாகதிப் பொருளா தாரம்’ என்ற தலைப்பில் நான் மலை யாளத்தில் ஓரு புத்தகம் எழுதி வெளி யிட்டேன். தற்போது மறுபதிப்பிற்கு ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்று ஆய்வு செய்தபோது, அதற்கு அவசியமேற்படவில்லை. இப் போதும் அந்த மதிப்பீடுகள் அப் படியே பொருந்துகின்றன. 1991ல் இந்த நாடு எப்படி ஓர் கடன் வலை யில் சிக்கியது. ஐ.எம்.எப் நிபந்தனை களை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது என்ற ஆய்வே அப்புத்தகம். நாட்டில் விவ சாயமும், தொழிலும் வளர்ந்தால் தான் வேலை வாய்ப்பும் வருமான மும் பெருகும். 1947 விடுதலைக்குப் பின்னர் முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தேவையான இடுபொருட்கள், உள் கட்டமைப்பு வசதிகளை அரசுதான் மேற்கொண்டது. ஏனென்றால் பெரு முதலாளிகள் அன்று முதலீடு செய்ய முன் வரவில்லை. 1950 களுக்குப் பின் னர் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாக தொடர்ந்து இருந்தது. விவசாயம் வளர்கிறது. தொழில் உற் பத்தி பெருகியது. உற்பத்தியான பொருட்களை யார் வாங்குவது? அதற்கு வருமானம் வேண்டாமா மக் களிடம்? இங்கு, நிலச்சீர்திருத்தம் செய்யப்படாததால் மக்கள் வசம் பணம் இல்லை. எனவே பொருட் கள் தேங்கின. உடனே அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி ஏழைகளால் வாங்க முடியாத இந்த பொருட்களை போணியாக்க ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் என்று நாட்டின் திசைவழியை மாற்றினார். ஆனால் ஏற்றுமதிக்குப் பதிலாக இறக்குமதி தான் அதிகரித்தது. அப்போது கடன் கொடுத்த நாடுகள் கழுத்தைப் பிடித் தன. புதிய புதிய நிபந்தனைகளை விதித்தன. அதனை சமாளிக்க புதிய கடன் வாங்க வேண்டி இருந்தது. இறுதியில் 1991ல் இந்த நெருக்கடியை சமாளிக்க தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கையை ஏற்றுக் கொண்டனர். விடுதலைக்கு பிந்தைய இந்தியா அதுவரை கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகள் கைவிடப்பட்டன.தற்போது, டாலருக்கு நிகராக 54 ரூபாய் என ரூபாய் மதிப்பு உள்ளது. இது சென்ற ஆண்டு 44 ரூபாய் என இருந்தது. அடுத்த ஆண்டு 74 ரூபாய் ஆகப் போகிறது. அந்நியச் செலா வணி கையிருப்பின்றி 1991 ல் தங்கம் அடகு வைத்து சிரமப்பட்டது போன்று மீண்டும் ஓர் நெருக்கடி ஏற்படும் என்று அரசும் அஞ்சத்தான் செய்கிறது. மெக்சிகோ, பிலிப் பைன்ஸ், பிரேசில் நாடுகளுக்கு நெருக்கடியில் சிக்குவோமோ என்ற பயம் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் அதற்கான உரிய தீர்வைக் காணத்தான் தயாரில்லை. அடுத்து இந்த தாராளமயத்தால் மிதமிஞ்சி லஞ்ச ஊழல் பெருகிவிட்டது. ரூ.1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ரூ. 1.80 லட்சம் கோடி கோதா வரி படுகை ஊழல், ரூ. 2 லட்சம் கோடி எஸ். பேண்டு ஊழல், சுரங்க, கனிமக்கொள்ளை என அடுக்கடுக்கான ஊழல் முறை கேடு பெருகிவிட்டது. மக்களின் செல்வ ஆதாரங்கள் கொள் ளையடிக்கப்படுகிறது. இப்படித் தான் 55 டாலர் பில்லியனர்கள் வளர்ந்தார்கள். கடந்த 10 ஆண்டு காலமாகவே நமது பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஏன்? உற்பத்தி யான பொருட்கள் விற்பனையாக வில்லை. தேக்கம் நிலவுகிறது. இதற்கு இயல்பான முறையில் தேவையை அதிகரித்து சமாளிக்க வேண்டும். ஆனால் பொருட்களின் விலையை உயர்த்தி, வட்டி விகிதத்தை அதிக ரித்து எப்படி சமாளிக்க முடியும். அமெரிக்க, ஐரோப்பா நெருக்கடி யால் இந்திய முதலாளிகள் புதிய முத லீடு செய்வதை நிறுத்தி விட்டார்கள். அரசு செலவினத்தை அதிகரித்து, வட்டி விகிதத்தை குறைத்து நெருக் கடியை சமாளிப்பதற்கு பதிலாக தலை கீழான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறதே. பணவீக்கம், விற் பனை அதிகமாவதால் உருவாக வில்லை. பெட்ரோல் மற்றும் பண்டங்களின் விலை உயர்வு, பொது விநியோக சீரழிவு, பதுக்கல், கள்ளச் சந்தையால் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.மலையாளத்தில் ஓர் கதை சொல் வார்கள், இரண்டு நண்பர்கள் காசிக் குச் சென்றார்களாம். ஒரு இலையும், களிமண் உருண்டையும் வைத்திருந் தார்களாம். மழை வந்தால் இலை யால் களிமண் உருண்டையை மூடு வது, காற்றடித்தால் இலையின் மேல் உருண்டையை வைத்தும் சமாளித் தார்களாம். காற்றோடு மழை வந்து களிமண்ணையும் கரைத்து இலை யையும் பறக்கடித்ததாம். அப்படித் தான் தேக்கம் மட்டும் வந்தால் (ளவயபயேவiடிn) சமாளிக்கலாம். அல்லது பணவீக்கம் மட்டும் (iகேடயவiடிn) ஏற் பட்டாலும் எதிர்கொள்ளலாம். இரண்டுமே சேர்ந்து வந்தால் சமா ளிக்க முடியாது. அப்படித்தான் இந் தியப் பொருளாதாரம் திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறது. எனவேதான், இந்திய ஆளும் வர்க்கம் நிதி தாராள மயமாக்கல், தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் மூலம் அவர்களது சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்த முயற்சிக்கிறார்கள். இதனை ஒரு போதும் சுமக்க முடியாது என்று அறைகூவல் விடுத்து, தொழிலாளி வர்க்கம் எதிர்த்தாக வேண்டும். வெற்றிகரமாக இதனை எதிர் கொண்டு முறியடிப்போம், முன் னேறுவோம். இவ்வாறு அவர் பேசினார். அவரது உரையை சிஐடியு மாநி லத் தலைவர் ஆர்.சிங்காரவேலு மொழியாக்கம் செய்தார்.இக்கருத்தரங்கில் “நீதிமன்றங்கள் முன்னால் தொழிலாளர்களும் – தொழில் முனைவோரும்” என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர். வைகை, `தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள்’ என்ற தலைப் பில் இந்திய தொழில் வர்த்தக சபை முன்னாள் தலைவர் ஏ.வி. வரதராஜன், “இன்றைய தமிழக தொழிலாளர் கள்” என்ற தலைப்பில் சிஐடியு தமிழ் மாநில பொதுச் செயலாளர் அ. சவுந்தரராசன் எம்.எல்.ஏ ஆகியோர் கருத்துரையாற்றினர். சிஐடியு கோவை மாவட்டச் செய லாளர் எஸ். ஆறுமுகம் நன்றி தெரி வித்து பேசினார். (ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.