புதுதில்லி, ஜூன் 4-தமிழக அரசின் திட்ட செல வின மதிப்பீட்டுக்கு சிறப்பு உதவி, கூடுதல் உதவியை கேட் டுள்ளோம். ஆனால் அந்த நிதி உதவி கிடைப்பதாக தெரிய வில்லை என முதல்வர் ஜெய லலிதா தில்லியில் கூறினார்.மாநிலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் மத்தியத் திட் டக்குழு கூட்டம் தலைநகர் தில்லியில் திங்கட்கிழமை நடை பெற்றது.இந்தக் கூட்டத்திற்காக தில்லி சென்ற முதல்வர் ஜெய லலிதா மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை சந்தித் தார். 12வது ஐந்தாண்டுத் திட் டத்தின் முதல் வருடமான 2012 – 13ம் ஆண்டு தமிழக நிதி ஒதுக் கீடு குறித்து ஆலோசனை நடத் தினார்.இந்தக் கூட்டத்தில் தமிழகத் தின் நடப்பு நிதியாண்டு திட்டப் பணிகளுக்கு ரூ.28 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என முதல்வர் கூறினார்.நடப்பு நிதியாண்டில் (2012-13) மோனோ ரயில், மெட்ரோ ரயில், மின் ரயில் உற்பத்தித் திட் டங்கள், அடிப்படைக் கட்ட மைப்பு வசதிகள், சமூக நலத் திட்டங்கள், வேளாண்மை, தொழில் மேம்பாட்டுத் திட்டங் கள் என பல்வேறு இனங்க ளுக்கு ரூ.28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என மத்திய திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் கூறினார்.
திட்டக்குழுக் கூட்டத்தில் முதல்வருடன் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, நிதித்துறை முதன் மைச் செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்குப் பின்னர், தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதா பேட்டி யளித்தார்.அப்போது அவரிடம் தமிழ கத்தின் ஆண்டு திட்டச் செல வீன மதிப்பீடு என்ன என செய் தியாளர்கள் கேட்டனர்.அதற்கு முதல்வர் ஜெய லலிதா பதிலளிக்கையில், 2012-13ம் நிதியாண்டிற்கு தமிழகத்தின் ஆண்டுச்செலவின மதிப்பீடு ரூ.28 ஆயிரம் கோடியாக நிர் ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு செலவீன மதிப் பீட்டைக் காட்டிலும் 19 சத வீதம் கூடுதல் ஆகும். இந்த ரூ.28 ஆயிரம் கோடியில் மத்திய அர சின் பங்களிப்பு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு மட்டுமே.இதர செலவின மதிப்பீட்டுத் தொகை முழுவதும் தமிழகத்தின் சொந்த நிதியாகும். பல்வேறு இனங் களின் சிறப்பு உதவி,கூடுதல் உதவியை கேட்டுள் ளோம். ஆனால் இந்த உதவி கிடைப்பதாகத் தெரியவில்லை. எங்களது பணத்தை எப்படி செலவு செய் வது என்பதை வேண்டுமானால் அவர்கள் கூறு வார்கள் போலும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: