புதுச்சேரி, ஜூன் 4 –
ஜிப்மர் நுழைவு தேர்வில் லாஸ்பேட்டை மாருதி கல்வி அறக்கட்டளையில் படித்த மாணவர்கள் 25 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.புதுச்சேரி ஜிப்மர் எம்.பி.பி.எஸ்நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 27ஆம்தேதி புதுச்சேரி உட்பட பல் வேறு மாநிலங்களில் உள்ள 12 மையங்களில் நடை பெற்றது. இந்நுழைவு தேர்வில் தேர்வு எழுதிய புதுச் சேரி லாபேட்டையில் உள்ள மாருதி கல்வி அறக் கட்டளை மாணவர்கள் 25பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாருதி கல்வி அறக்கட்டளை நிறுவன இயக்குநர் சத்தியானந்தம் திங்களன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு:-தேர்ச்சி பெற்ற பேராசிரியர்கள் உதவியுடன் மாருதி அறக்கட்டளை கல்வி நிறுவனம் கடந்த 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.கடந்தாண்டு ஜிப்மர் நுழைவு தேர்வில் 23 மாணவர்கள் தேர்சி பெற்றனர். ஒவ்வெரு வருடமும் இக்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வெற்றிக்கு உருதுனையாக இருந்த நிறுவத்தின் பேராசிரியர்கள், பெற்றோர்க ளுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். மேலும் மாருதி அறக்கட்டளை சார்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல் பட்டு வருகிறது என்றார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில்78 விழுக்காடு தேர்ச்சி
திருவண்ணாமலை, ஜூன் 4 –
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவண்ணா மலை மாவட்ட மாணவ, மாணவியர் 78.19 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 41 மாணவர்களும், 17 ஆயிரத்து 320 மாணவிகளும் சேர்த்து மொத்தம் 35 ஆயிரத்து 361 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 13 ஆயிரத்து 555 மாண வர்களும், 14 ஆயிரத்து 92 மாணவிகளுமாக மொத்தம் 27 ஆயிரத்து 647 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு 79.76 என்பது குறிப்பிடத் தக்கது. இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மயூரவள்ளி 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், செய் யார் இண்டோ அமேரிக்கன் மேல்நிலைப்பள்ளி மாணவி மாலினிதேவி 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இதேபோல் திருவண்ணாமலை கணகாம்பாள் பள்ளி மாணவி திவ்யா, தி.மலை ஜீவாவேலு மேல் நிலைப் பள்ளி மாணவன் சக்திபாலன், காவேரியாம்பூண்டி ஆர்.எம்.எம் மேல்நிலைப் பள்ளி மாணவி ரம்யா ஆகி யோர் 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத் தையும் பெற்றுள்ளனர். செங்கம் மகரிஷி உயர்நிலைப் பள்ளி மாணவி பிருந்தா 487 மதிப்பெண்கள் பெற்று நான்காவது இடத் தையும் தி.மலை கல்வி மாவட்டத் தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். மேலும் தி.மலை சிஷ்யா மெட்ரிக் பள்ளி, சேத்துப்பட்டு திவ்யா மேட்ரிக் பள்ளி உள்ளிட்ட 54 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்றுள்ளன.
தருமபுரி : 52 பள்ளிகள் சாதனை
தருமபுரி. ஜூன் 4 –
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தருமபுரி மாவட்டத்தில் 52 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.தருமபுரி மவாட்டத்தில் மாணவிகள்13369 மாண வர்கள் 11793 ஆக மொத்தம் 25162 பேர் தேர்வு எழுதி னர். இதில் மாணவர்கள் 10937, மாணவிகள் 9981 மொத்தம் 20918 பேர் தேர்ச்சி பெற்றனர்,மாவட்டத்தில் ஸ்ரீ விஜய் வித்தியாலயா மெட்ரிக் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சி. தேவசானா வும், எச். தொட்டம்பட்டி ஜெயம் வித்யாலாயா மெட் ரிக்பள்ளி மாணவன் இ. நவநீதனும் தலா 493 மதிப் பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.ஸ்ரீ விஜய் வித்யாலாயா மெட்ரிக் ஆண்கள் மேல் நிலைப்பள்ள மாணவி எம். பிரீத்தி 492 பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதே பள்ளி யைச் சேர்ந்த மாணவர்கள் ஆர். ஆக்சய், ஆர். அருண் பிரசாந்த், ஸ்ரீ விஜய் வித்யாலாய மெட்ரிக் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர் வி.மோகன்ராஜ் ஆகி யோர் தலா 491 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளனர்.அரசு பள்ளிகளில் இலளிகம் அரசு மேல்நிலைப் பள்ளிச் சேர்ந்த மாணவர் இ. பிரேம்குமார் 484 பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார். தருமபுரி அவ்வை யார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சி. சுரவி 482 பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளி யைச் சேர்ந்த மாணவர் எம். சேகர் 480 பெற்று மூன் றாம் இடத்தை பிடித்துள்ளார். மாவட்டத்தின் மொத்த தேர்சி விழுக்காடு 83 ஆகும், இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் ஆர். லில்லி தெரிவித்தார்.
வீனஸ் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி
சிதம்பரம், ஜீன் 4 –
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியை சேர்ந்த சி.பாலகிருஷ்ணா 486 மதி பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பெற்றுள் ளார். எம்.தனுஸ்ரீ 485 மதிபெண் பெற்று இரண்டாம் இடமும் ஆர் தேவசுந்தரம் 483 மதி பெண் பெற்று மூன் றாம் இடமும் பெற்றனர். இந்த ஆண்டு தேர்வெழுதிய 178 மாணவர்களும் தேர்ச்சி அடைந் துள்ளனர். இவ் வெற்றிக்கு அயராது பாடுபட்ட ஆசி ரியர்கள் மற்றும் மாணவர்களை தாளாளர்வீனஸ் குமார் அவரது துனைவியார் ரூபியாள்ராணி மற்றும் தலைமை ஆசிரியர் மகேஷ்சுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

Leave A Reply