சென்னை, ஜூன் 4-சேலம் அங்கம்மாள் காலனி யில் உள்ள குடிசைக்கு தீ வைத் தது, அங்குள்ள 10க்கும் மேற் பட்ட குடிசைகளை சூறையாடி யது தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் வீர பாண்டி ஆறுமுகம் திங்களன்று பிற்பகல் சென்னையில் கைது செய்யப்பட்டார். சேலம் புதிய பேருந்து நிலை யம் அருகே உள்ள அங்கம்மாள் காலனி இடத்தை முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், அவரது ஆட் களும் அபகரித்தது தொடர் பாக, எழுந்த புகாரை அடுத்து அவர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந் நிலையில் அங்கம்மாள் கால னியில் முன்பு வசித்தவர்கள் சிலர் அங்கு வந்து மீண்டும் குடிசை போட்டு அந்த இடத்திற்கு காவேரி நகர் என்று பெயர் சூட் டினர். இந்நிலையில் சனிக் கிழமை நள்ளிரவு 30க்கும் மேற் பட்டோர் அந்த காலனிக்கு வந்து ஒரு குடிசைக்கு தீ வைத்தனர். மேலும் அங்குள்ள 10க்கும் மேற் பட்ட குடிசைகளை சூறையா டினர். அங்குள்ளவர்களையும் மிரட்டியுள்ளனர்.இதற்கு காரணம் வீரபாண்டி ஆறுமுகம் தான் என்று அந்த குடிசைவாசிகள் கொடுத்த புகா ரின் பேரில் சேலம் பள்ளப்பட்டி போலீசார் வீரபாண்டி ஆறு முகம் உள்பட 20 பேர் மீது வழக் குப்பதிவு செய்தனர். இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்ய போலீசார் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென் றனர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லை. அண்ணா அறிவாலயத்திற்கு சென்றிருந் தார். இதையடுத்து வீரபாண்டி யாரின் வீடு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர் வீடு திரும்பியதும் போலீசார் அவரை கைது செய்தனர்.

Leave A Reply