சிஐடியு அகில இந்திய பொதுக்குழுபேரணிக்கு வருவோர்கவனத்திற்கு…
கோவை, ஜூன் 4-இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியுவின் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் ஜூன்-2ம்தேதி முதல் ஜூன் 5ம்தேதி வரை கோவையில் நடைபெறுகிறது. இது குறித்து இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியுவின் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் ஜூன்-2ம்தேதி முதல் ஜூன் 5ம்தேதி வரை கோவையில் நடைபெற்று வருகிறது. இப்பொதுக் கூட்டத்தின் நிறைவு நாளான இன்று சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டிலிருந்து பேரணி புறப்பட்டு சிவானந்தா காலனியில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. பேரணிக்கு வரும் தோழர்களை அழைத்து வரும் வாகனங்கள் வி.கே.கே. மேனன் ரோட்டில் இறக்கிவிட்டுவிட்டு சிவானந்தா காலனியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, பைக்காரா ரோடு ஆகிய சாலைகளில் நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பேரணி மாவட்டம் வாரியாக கீழ்கண்ட வரிசையின் அடிப்படையில் இரு வரிசையில் அணிவகுத்து வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.1. திருப்பூர், 2. ஈரோடு, 3. சேலம் 4. தர்மபுரி, 5. கிருஷ்ணகிரி, 6. நாமக்கல் ஆகிய வரிசையின் பின்பற்றுமாறும், மேலும் விபரங்களுக்கு 94420 02005 மற்றும் 98428 19196 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு: சேலத்தில் 13 சிறப்பு மையங்கள்
சேலம், ஜூன் 4-தேர்வாணையம் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க சேலம் மாவட்டத்தில் 13 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி ஆட்சியர் மகரபூஷணம் கூறியதாவது:-தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகளுக்கு போட்டித் தேர்வை மாநில பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்டம் தோறும் கூடுதலாக மையங்கள் அமைக்க தேர்வாணையம் உத்தரவிட்டதன்பேரில் சேலம் மாவட்டத்தில் 8 தபால் நிலையங்கள்,4 வங்கிகள், சங்ககிரி தாலுகா அலுவலகம் ஆகிய 13 இடங்களில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையங்கள் அனைத்திலும் இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம். அரசு பணிக்கு தேர்வு எழுதும் மாணவ மாணவிகள்இந்தவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
உதகை, ஜூன் 4-உதகை மின் வாரிய அலுவலகத்தில் இன்று மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:உதகை நகரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் உதகை, கமர்சியல் சாலை, லேக்வியூ, எட்டின்ஸ் சாலை, ஆஸ்பிட்டல் ரோடு, உதகை உதவி செயற்பொறியாளர் கிராமியம் பகுதிக்கு உட்பட்ட தலைக்குந்தா, தும்மனட்டி, எல்லநள்ளி, எம்.பாலாடா, தேனாடுகம்பை மற்றும் பைக்காரா மின் நுகர்வோர்கள் தங்கள் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் குறித்து நேரடியாக மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave A Reply

%d bloggers like this: