எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன அறிவிப்புதஞ்சாவூர், ஜூன் 4-திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சித் துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர் களையும், இயக்குநர்களை யும் உருவாக்கி வரும் எம்.ஜி.ஆர். அரசு திரைப் படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவனத் தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவியர்கள், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல், படம் பதனிடுதல், படத் தொகுப்பு ஆகிய நான்கு பிரிவுகளிலும் பட்டப் படிப்பில் தேர்ச்சியுற்ற வர்கள் இயக்குதல் பிரிவி லும், இக்கல்லூரியில் மூன்றாண்டு கால பட் டயப்படிப்பிற்காக 2012 -13 ஆண்டில் முதலாமாண்டு சேர்க்கைக்கான விண் ணப்பங்கள், மூன்றாண்டு காலபட்டயப்படிப்புகளுக் காகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலைத்துறையில் கலைஆர்வத்தை வளர்த் துக் கொள்ள விரும்பும் மாணவ – மாணவியர்கள் விண்ணப்பங்களை ஜூன் 15ம்தேதிக்குள் முதல்வர் எம்.ஜி.ஆர். அரசு திரைப் படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவனம், சென்னை – 600 113 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண் ணப்பங்களை தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை
மதுரை, ஜூன்4-திருமணமான பின் படிக்க அனுப்பாததால் விரக்தியடைந்த பெண் சூப்பர்வாஸ்மாலை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.மதுரை புதுவிளாங் குடியைச் சேர்ந்தவர் கார்த் திக்ராஜா. இவருக்கும் நியூ பங்கஜம் காலனி கவிமணி தெருவைச் சேர்ந்த ஆர்த்தி (19) என்பவருக்கும் 27 நாட் களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. பிளஸ் 2 வரை படித்தி ருந்த ஆர்த்தி தொடர்ந்து படிக்க வேண்டுமென கூறி யிருக்கிறார். இதில் ஏற் பட்ட பிரச்சனையில் ஆர்த்தி சூப்பர் வாஸ்மாலை குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராஜசேகர் என்பவர் அளித்த புகாரின் பேரில் கூடல்புதூர் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் ஒருவர் பலி
மதுரை, ஜூன் 4-மதுரை பைக்காரா வைச் சேர்ந்தவர் ஜெய பால். இவரது மனைவி நந்தா. நந்தா பைக்காரா பகுதி அனைத்திந்திய ஜன நாயக மாதர்சங்க தலைவ ராக உள்ளார். சம்பவத் தன்று இவர் தனது மகன் ஹரீஷ், மகள் தனுஸ்ரீ ஆகியோருடன் மதுரை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சாலையில் இரு சக்கர வாக னத்தில் சென்று கொண்டி ருந்தார். அப்போது அவ் வழியே சென்று கொண்டி ருந்த லாரியும் இவர்கள் சென்ற இருசக்கரவாகன மும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டதில் ஹரீஷ் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். காய மடைந்த நந்தா, தனுஸ்ரீ இருவரும் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

நகைப் பறிப்பு
மதுரை,ஜூன் 4-உசிலம்பட்டி கவண் டன்பட்டி சாலையில் குடி யிருந்து வருபவர் ராஜ பாண்டி. இவரது மனைவி நாகஜோதி(38). இவர் தும் மக்குண்டு அருகே உள்ள கோவில் ஒன்றிற்கு சென்று விட்டு வீட்டிற்குச் செல் வதற்காக கவண்டன்பட்டி சாலையில் சென்று கொண் டிருந்தபோது அடையா ளம் தெரியாத நபர்கள் நாகஜோதி கழுத் தில் கிடந்த நான்கரை பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: