ஆதர்ஷ் ஊழல்: மேலும்2 பேர் ஜாமீன் கோரி மனு
மும்பை: ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை யடுத்து மேலும் 2 பேர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.முன்னாள் மாநகராட்சி மன்றத் தலை வர் ஜெயராஜ் பாடக்கும் முன்னாள் மாநி லத் தலைமை தகவல் கமிஷனர் ராமானந்த் திவாரியும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் திங் களன்று மனுத்தாக்கல் செய்தனர்.

நித்யானந்தா நியமனம்:மலேசியாவில் எதிர்ப்பு
ஈப்போ: நித்யானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நியமித்த செயல் சைவர்கள் போற்றும் சைவ மரபுக்கு விடுக்கப்பட்ட பெரும் மிரட்டலாக கருதப்படுகிறது என்று மலேசியாவில் நடைபெற்ற முதலாம் உலக சைவ சமய மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

ஆருஷி கொலை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
புதுதில்லி: மாணவி ஆருஷி-ஹேம்ராஜ் இரட்டைக் கொலை வழக்கு விசாரணை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட் டுள்ளது. காஸியாபாத் வழக்குரைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந் ததன் காரணமாக இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர் நூபுர் மற்றும் ராஜேஷ் ஆகியோர் மீது கொலைக்குற்றம் மற்றும் ஆதாரங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காங். கோஷ்டி மோதல்கள்: சோனியாகாந்தி கவலை
புதுதில்லி: தில்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் திங்களன்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:காங்கிரசுக்கு எதிரான சக்திகளும் எதிர்க்கட்சிகளும் பிரதமருக்கு எதிராக தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரு கின்றன. அவை அனைத்துமே ஆதாரமற் றவை. நாட்டின் பொருளாதார நிலைமை யானது நிச்சயம் நமக்கு சவாலானதுதான். ஆனால் காங்கிரஸ் அல்லாத மாநிலங்கள் மத்திய அரசு உரு வாக்கும் கொள்கைகளை ஏற்க மறுத்து, முரண்பாடான நிலையைக் கடைப்பிடித்து வருகின்றன.மாநில சட்டப்பேரவைகளுக்கும் அடுத்த பொதுத்தேர்தலுக்கும் நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. நமது கட்சியை வளர்த் தால்தான் அதைப் போல் இரு மடங்கு பலனை எதிர்பார்க்க முடியும். எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் கோஷ்டி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ் வாறு அவர் பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: