நாகபட்டினம், ஜூன் 4-நாகை நகராட்சிக்கு உட்பட்ட நாகூர் நகரின் வீதிகளும் சாலைகளும் எப்போதும் சாக்கடையும் குப்பைகளுமாகவே காட்சி யளிக்கும். நாகை நகரும் சேர்த்துத்தான். இவை மட்டுமல்ல, சில இடங் களில் நகராட்சிக் குடிநீர்க் குழாய்களில் சாக்கடை கலந்த நீரும் வருவதுண்டு. பொதுமக்கள் வார்டு உறுப் பினர்களிடம் முறையிடு வார்கள், நகர்மன்றக் கூட் டங்களில் வார்டு உறுப்பி னர்கள் முறையிடுவார்கள்.ஆனால், எதுவுமே நடக் காமல், நாட்கள் மட்டும் நகரும். மக்களும் இதற்குப் பழகிப்போய் விட்டார்கள்.இந்த அவலக் காட்சி கள், நாகை மாவட்ட ஆட் சியர் து.முனுசாமிக்கே பொறுக்கவில்லை. அவர், சில நாட்களுக்கு முன், நாகை நகராட்சி ஆணையர் அப்துல் லத்தீபு,வட்டாட் சியர் எல்.சம்பத்குமார், நாகூர் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் சிலர் மற் றும் அரசு அலுவலர்கள் சிலரை அழைத்துக் கொண்டு, நாகூர் தெருக் களில் வலம்வந்து, அங்கு நிறைந்து கிடக்கும் சாக் கடை, குப்பைக் கூளக் காட்சிகளைத் துப்புரவு ஆய்வாளர்களுக்கும் மற்ற வர்களுக்கும் காட்டினார். நாகை நகரத் துப்புரவு ஆய் வாளர் அரசகுமார் கடு மையாக எச்சரிக்கப்பட் டார்.நகரைத் தூய்மையாக வைத்திருக்குமாறு ஆணை யரும் அறிவுறுத்தப்பட் டார்.இதில், முக்கியமாகக் குறிப்பிடப் படவேண்டி யது என்னவென்றால், கடந்த 26.5.2012 அன்றுதான், நாகூர் நகரை அழகுபடுத் துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலை மையில், ஆலோசனைக் கூட்டம், நாகூர் நகரில் நடைபெற்றது.

Leave A Reply