புதுச்சேரி, ஜூன் 4 –
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுச்சேரி மாண வர்கள் 91.67விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் என்.ரங்கசாமி செய்தியளார்களிடம் தெரி வித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:- இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த மாணவர்கள் 18 ஆயிரம் பேர் தேர்வு எழுதி னர். இதில் 16ஆயிரத்தி 500 மாணவ மாணவிகள் தேர் வில் வெற்றி பெற்றுள்ள னர். தேர்ச்சி விகிதம் 91.67 விழுக்காடாகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.72 விழுக்காடு கூடுதலாகும். மாநிலத்தின் முதல் மாணவராக லாஸ்பேட்டை டான்போகோ பள்ளியை சேர்ந்த மாணவி கயில்விழி 496 மதிப்பெண் பெற்றுள் ளார். இரண்டாவதாக பெத்தி செமினார் பள்ளியை சேர்ந்த மாணவன் கவுதம் 493 மதிப்பெண்களும் முன் றாவதாக லாஸ்பேட்டை குளுனி பள்ளி மாணவி தன்னுஸ்ரீ 492மதிப்பெண் கள் பெற்றுள்ளனர்.அரசு பள்ளி மாணவர் கள் அரசு பள்ளி அளவில் காரைக்கால் விழுதியூர் அரசு உயர்நிலைப் பள்ளி யைச் சேர்ந்த பி.சுகப்ரியா 480 மதிப்பெண் கள் பெற்று முதல் இடத்தையும், காரைக் கால் திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பி.ஹேமா 478 மதிப்பெண் கள் பெற்று இரண்டாவது இடத்தையும் கரையாம்பத் துர் அரசு மேல்நிலைப்பள்ளி யைச் சேர்ந்த பி.நரேஷ் குமார் 473 மதிப்பெண்கள் பெற்று மூன்றவாது இடத் தையுடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
புதுச்சேரி -காரைக்கால் பகுதிகளில் 116பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 14 பள்ளிகள் கிராமபுரத்தி லும் பள்ளிகள் நகரபுரத்தி லும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. ஏற்கனவே அரசு அறி வித்துள்ளபடி கிரமாப் புறத்தை சேர்ந்த பள்ளிகள் 100சதவீத தேர்ச்சி பெற் றால் ரூ.லட்சம் பள்ளிக ளுக்கு வழங்கபடும் என்ற படி இந்த 14பள்ளிகளுக் கும் அரசு வழங்கும்.மருத்துவம்,பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிக்க அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்டு தனியார்கல் லுரிகளுக்கு அனுப்படும் சென்டாக் மாணவர்களின் காமராஜர் கல்வி உதவித் தொகையை இந்த ஆண்டு அரசு உடனே செலுத்தும் பெற்றோர்கள் அச்சபட வேண்டாம். புதுச்சேரி அரசு சார்பில் தனி கல்வி வாரி யம் துவக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு முதல்வர் கூறி னார்.இந்த பேட்டியின் போது கல்வி அமைச்சர் தியாக ராஜன், அரசு செயலர் ராகேஷ் சந்திரா, இயக்குநர் வல்லவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: