புதுதில்லி, ஜூன் 4 -உலக வெப்பமயமாதல் நிகழ்வால் அதிகரித்து வரும் கடல்நீர் மட்டத்தில் மேற்கு மற்றும் கிழக்கு கடல்பகுதி களின் பல பகுதிகள் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச் சரிக்கப்பட்டுள்ளது. குறிப் பாக மகாராஷ்டிரா, கேரளா கடலோரப் பகுதிகள் மூழ்கும் அபாயம் உள்ளது என கூறப்பட்டுள்ளது.கிழக்கு கடலோரத்தின் கங்கை, கிருஷ்ணா, கோதா வரி, காவேரி, மகாநதி டெல்டா பகுதிகளும் பாசன நிலங்க ளும் கடல்நீர் உயர்வால், அபாய நிலையில் உள்ளன என்று அரசு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை யில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில் கடல்நீர் மட்டம் 1990ம் ஆண்டு முதல் 2100ம் ஆண்டு வரை 34 முதல் 34.6 இன்ச் அளவு அதிகரிக்கும் என்றும் இத னால், கடலோரப் பகுதி களில் உள்ள நிலத்தடி நீர் உவர் தன்மையை அடை யும் என்றும் சதுப்பு நிலங் கள் அபாய நிலையை எட் டும் என்றும், கடலோர சமூக பகுதிகளும், மதிப்புமிக்க நிலப்பகுதிகளும் வெள்ளத் தில் சூழும் என்றும் எச்சரிக் கப்பட்டுள்ளது.மேற்கிந்திய கடலோரப் பகுதிகளில் மிகவும் பாதிப்பு அடையும் பகுதிகளாக கம் பத், கட்ச் (குஜராத்), மும்பை, கொன்கன் கடலோரத்தின் சில பகுதிகள், தெற்கு கேரளா பகுதி ஆகியவை பாதிக்கப் படும் நிலையில் உள்ளன.பருவநிலை மாற்றம் மீது ஐ.நா.வுக்கான இந்தியா வின் 2வது தேசிய தொடர்பு அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பாதிப்பு நிலை பகுதி களை ஆய்வு செய்த நிபு ணர்கள் இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர். இந்த அறிக்கையை 120 நிறு வனங்களுக்கு மேலாக 220 விஞ்ஞானிகளை உள்ளடக் கிய பல்வேறு நிலை குழுக் கள் தயாரித்துள்ளன. 2004ம் ஆண்டு சுனாமியால் பாதிக் கப்பட்ட நாகப்பட்டினம், கேரளாவில் கொச்சியை சூழ்ந்துள்ள பின்னேற்ற நீர்ப்பகுதி, ஒடிசாவின் பார தீப் என விரிவான விளைவு ஆய்வு அறிக்கைக்காக பார் வையிட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: