கடலூர், ஜூன் 4 –
கடலூர் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 661 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 30 ஆயிரத்து 544 பேர் தேர்ச்சி பெற்றனர்.நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவி வி.வித்யா 494 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதலாவதாக வந்துள்ளார்.நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவி டி.கலைவாணி, நெய்வேலி குளூனி பள்ளி மாணவி எஸ்.இளமதி, கடலூர் புனித மேரி மெட்ரி பள்ளி மாணவிகள் ஃப்ராமுந்தாஸ், எஸ்.சரண்யா, சேத்தியார் தோப்பு சந்திரா மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி எம்.பர்வினா ஆகிய 5 மாணவி கள் 493 மதிப்பெண்கள் பெற்று இரண் டாவது இடத்தை பிடித்துள்ளனர்.கடலூர் ஏ.ஆர்.எல்.எம் மேல்நிலை பள்ளி மாணவன் பி.செந்தில்ராஜ், சி.கே. பள்ளி மாணவன் டி.பார்த்த சாரதி, நெய் வேலி ஜவகர் பள்ளி மாணவிகள் இ. ஏழிசை, எம்.சஞ்சனா ஆகியோர் 492 மதிப் பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பிடித்தனர்.அரசு பள்ளிகளில் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள் ஜி.ஜோதிஸ்வரி 491 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், அதை பள்ளி மாணவி எச்.ஹரிப்பிரபா 481 மதிப்பெண்கள் எடுத்து இடம் இடத்தையும், ஏ.சவுமியா, விருதாச்சலம் மகளிர் பள்ளி மாணவி என்.சங்கீதா ஆகியோர் தலா 477 மதிப் பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.ஹந்தியை மொழி பாடமாக படித்த கடலூர் லட்சுமி சேர்டியா மெட்ரிக் பள்ளி மாணவன் ஜங்கர் சிவாஜி கக்கார் ஹந்தியில் 99மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித் துள்ளார். மொத்தம் 495 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்
.இம்மாவட்டத்தில் 75 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 5 பள்ளிகள் அரசு பள்ளிகளாகும். வண் ணாரப்பாளையம், நெய்வேலி, பெரிய குமுட்டி ஆகிய மூன்று பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.ஆங்கிலத்தில் இரண்டு மாணவர்க ளும், கணிதத்தில் 43, அறிவியலில் 233, சமூக அறிவியலில் 81 மாணவர்களும் நூற் றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ள னர். அதே நேரத்தில் தமிழ் பாடத்தில் 4362 பேரும், ஐந்து பாடங்களிலும் 326 மாண வர்களும் தேல்வி அடைந்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.