புதுதில்லி, ஜூன் 4 -ராம்தேவுடன் சிறு கருத்து மோதல்தான் ஏற் பட்டுள்ளது என கூறிய அர விந்த் கெஜ்ரிவால், ராம்தேவ் தன்னை விமர்சித்ததற்காக உண்ணாவிரத இடத்தி லிருந்து வெளியேறவில்லை என்றும் கூறினார்.தலைநகர் தில்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் ஊழ லுக்கு எதிராக அன்னா ஹசாரே – ராம்தேவ் உண் ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது, ஹசாரேவின் குழுவில் உள்ள அரவிந்த் கெஜ்ரி வாலை, ராம்தேவ் கண்டித் தார். இந்த நிலையில், கெஜ்ரி வால், போராட்ட இடத்தில் இருந்து வேகமாக வெளி யேறினார்.ராம்தேவ் விமர்சித்த தால் அவர் ஆத்திரத்துடன் வெளியேறியதாக கருதப்பட் டது. இதுகுறித்து கெஜ்ரி வால் கூறுகையில், அன்னா – ராம்தேவ் உண்ணாவிரத இடத்தை விட்டு வெளி யேறியது எதிர்பாராத நிகழ் வாகும். தனது உடல்நிலை சரியில்லாததால் அந்த இடத்தைவிட்டு வெளி யேறியதாகவும் ராம்தேவ் மீது மிகுந்த மரியாதை வைத் துள்ளேன்; எதிர்ப்புக் காரணமாக வெளியேறி னேன் என்பது தவறு ஆகும் என்றும் கெஜ்ரிவால் கூறி னார்.
ராம்தேவை தனிப்பட்ட முறையில் சந்தித்து, ஊழல் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப் பிட்ட நபர்கள் பெயர்களை கூறியது தொடர்பாக சமரசம் செய்வேன் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.தனிப்பட்ட எம்பிக்க ளை குறி வைத்து விமர்சிப் பது குறித்து, கெஜ்ரிவால் மீது ராம்தேவ் கண்டனம் தெரிவித்திருந்தார்.சில நாடாளுமன்ற உறுப்பினர்களை கெஜ்ரி வால் தாக்கி பேசியதும், ஊழலுக்கு எதிரான போராட்டம் தனி நபர் களுக்கு எதிரானது அல்ல என்றார். அரவிந்த் கெஜ்ரி வால் பெயர்களை குறிப் பிட்டு இருக்கக்கூடாது. அது சர்ச்சையை ஏற் படுத்திவிடும். தனிநபர்கள் மீது தாக்குதல் வேண்டாம் என்று ராம்தேவ் கூறினார்.பிரதமர் மன்மோகன் சிங்கையும் இதர அரசியல் தலைவர்களையும் கெஜ்ரி வால் விமர்சித்ததை பாபா ராம் தேவ் ஏற்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து ராம்தேவ் தனது உரையில் கூறுகையில், ஊழல் குறித்து யாருடைய பெயரையும் எடுக்கமாட் டோம் என கருதினோம். ஆனால் அரவிந்த் சில பெயர் கள் எடுத்துள்ளார். நாங்கள் சர்ச்சையை விரும்புவது இல்லை. யாருடனும் அர விந்துக்கு விரோதம் இல்லை. சில சூழ்நிலையில் இந்தப் பெயர்கள் கூறப்பட்டுள் ளன. தனிநபர் மீதான விமர் சனத்தை நாங்கள் எதிர்க் கிறோம் என்றார்.கெஜ்ரிவால் தனது உரை யில் மன்மோகன் சிங், முலா யம் சிங் யாதவ், லாலு பிர சாத் யாதவ், ஜெயலலிதா, மாயாவதியை விமர்சித்திருந் தார்.ராம்தேவுக்கும், கெஜ்ரி வாலுக்கு ஏற்பட்ட மோதல் பின்னணியில் அன்னா ஹசாரே குழுவினர் திங்கட் கிழமை கூடினர். இந்தக் கூட் டத்தில் அன்னா ஹசாரே, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் கிரண்பேடி, கோபால் ராய், சஞ்சய் சிங் ஆகிய முன் னணி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஊழல் எதிர்ப்பு இயக்க போராட் டத்தை வேகமாக முன் னெடுத்துச் செல்வதற்கு பிரதமர் உள்பட அரசியல் தலைவர்களின் பெயர்களை கூறுவது கட்டாயம் என கெஜ்ரிவால் கூறினார்.அன்னாஹசாரே குழு ஜூலை 25ம்தேதி முதல் காலவரையற்ற உண்ணா விரதத்தை மேற்கொள்வது தொடர்பாகவும் கூட்டம் விவாதிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: