ரோகித் சர்மாவின் மீட்பு ஆட்டத்தின் பலனாக இந்தியா ‘ஏ’ கிரிக்கெட் அணி 25 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா ‘ஏ’ அணி மேற்கு இந்தியத் தீவுகளில் முதல் டெஸ்ட் ஆடி வருகிறது.முதல் நாளன்று முதலில் ஆடிய மேற்கிந்திய அணி 252 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது அதையடுத்து ஆடிய இந்திய அணி 277 ஓட்டங்களில் இரண்டாம் நாளன்று ஆட்டம் இழந்தது. தனது இரண்டாவது இன்னிங்சில் மேற்கிந்தியா விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்கள் எடுத்துள்ளது.இந்திய அணியின் தொடக்கம் மோசமாக இருந்தது. அபிநவ் முகுந்தின் ஸ்டம்ப் நடைபழகியது. ரஹானே ரன் அவுட் ஆனார். சிகார் தவான் 9 ஓட்டங்களில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் நடுவரிசை நங்கூரமிட்டு ஆடத் தொடங்கியது.செட்டேஸ்வர் பூஜாராவும் ரோகித் சர்மாவும் சேர்ந்து 93 ஓட்டங்கள் எடுத்தனர். அரைச்சதம் அடித்தவுடன் பூஜாரா பந்தை தாமஸிடம் பிடிகொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மனோஜ் திவாரி (40), சர்மாவுடன் இணைந்து 72 ஓட்டங்களைக் குவித்தார். அவர் ஆட்டமிழந்தபின் சர்மாவும் வெளியேறினார். சர்மா ஆறு ஓட்டங்களில் சதத்தைத் தவறவிட்டார்.ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் விருத்தமான் சகா ஊன்றி ஆடினார். சகா 56 ஓட்டங்கள் எடுத்தார். மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜொனாதன் கார்ட்டர் ஐந்து விக்கெட்டுகளும் டெலோர்ன் ஜான்சன் மூன்று விக்கெட்டுகளும் எடுத்தனர். இந்தியா 277 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தது. ஆட்ட நேர முடிவில் சிம்மன்ஸ் (2) சும், பிராத்வெய்ட்டும்(0) களத்தில் உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: