புதுக்கோட்டை, ஜீன் 4- தலைவர்களின் பிரச்சா ரத்திற்கு தேர்தல் ஆணை யம் அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவா கவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் செயல்படும் இப்போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மை யாகக் கண்டித்துள்ளது. இது குறித்து மாவட்டச் செயலாளர் எம்.சின்ன த்துரை வெளியிட்டுள்ள அறிக்கை:புதுக்கோட்டை சட்ட மன்றத் தொகுதி இடைத் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக இருப்பவர் கோட்டாட்சியர் எஸ். முத்துமாரி. தேர்தல் பிரச் சாரத்திற்கு ஒலிபெருக்கி, தலைவர்களின் பிரச்சாரப் பயணங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான நட வடிக்கைகளுக்கு இவரிடம் தான் அனுமதி பெற வேண் டும். இதில் ஆளுங்கட்சிக்கு விசுவாசமாகவும், எதிர்க் கட்சிகளுக்கு பாரபட்சமா கவும் செயல்படுவது அப் பட்டமாகத் தெரிகிறது.எதிர்க்கட்சித் தலைவர் களின் பிரச்சாரத்திற்கு இவரிடம் அனுமதி பெறு வது என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. ஒரு நிகழ்ச்சிக்கு இவரிடம் அனுமதியைப் பெறுவதற்கு குறைந்தது 10 முறையாவது இவரின் அலுவலகப் படி களை ஏறி இறங்க வேண்டி யிருக்கிறது.
விசாரணை நடக்கிறது, முக்கிய வேலை யாக இருக்கிறார், தேர்தல் தொடர்பான கூட்டங்களு க்குச் சென்றுள்ளார். ஆய் விற்கு சென்றுள்ளார் என் பதே பதிலாக இருக்கிறது. கட்சியின் மாநிலத் தலைவர் களின் பிரச்சாரத்திற்குகூட அனுமதி தராமல் இழுத் தடிக்கிறார்.அதே நேரத்தில் 32 அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ, ஒன்றியம், வட் டம் என தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சியின் அத்தனை படாடோபங்களும் எந்த இடையூறும் இல்லாமல் தொகுதி முழுவதும் பிரச்சா ரம் செய்து வருகிறார்கள். இவர்கள் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பிரச்சாம் செய்ய அனுமதிக்கப்படு கிறார்கள். அவர்கள் கேட்ட இடத்தில் தேர்தல் பிரச்சா ரம் செய்ய உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது.ஆளுங்கட்சிக்கு ஒரு மாதியாகவும், எதிர்க்கட் சிகளுக்கு வேறு மாதிரியா கவும் செயல்படும் இப்போ க்கை மார்க்சிஸ்ட் கட்சி யின் புதுக்கோட்டை மாவ ட்டக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, தேர்தல் ஆணையத்தின் நன் மதிப்கைக் கெடுக்கும் வித மாகச் செயல்படும் புதுக் கோட்டைத் தொகுதி தேர் தல் அதிகாரியை மாநில தேர்தல் ஆணையம் கண் டிக்க வேண்டும். மேலும், அனைத்து அரசியல் கட்சி களுக்கும் தேர்தல் ஆணை யம் பாரபட்சமின்றி செயல் பட அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: