பிரிட்டன், ஜூன் 4-ஆப்கானிஸ்தானில் உள்ள நேட் டோ படையில் பல்வேறு நாடுகளின் ராணுவத்தினரும் முகாமிட்டுள்ளனர். இதில் இங்கிலாந்தை சேர்ந்த 417 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் போரில் ஈடு பட்டு வரும் நேட்டோ படையைச் சேர்ந்த இங்கிலாந்து ராணுவத்தை சேர்ந்த ஒருவர் ஹெல்மன்ட் மாகா ணத்தில் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்மூலம், ஆப் கானிஸ்தான் நேட்டோ படையுடன் இணைந்து போரில் ஈடுபட்டு வரும் இங்கிலாந்து ராணுவத்தினரின் இறப்பு எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள் ளது. ஹெமல்மன்ட் மாகாணத்தின் நகர் இ சரஜ் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட் டிருந்தபோது ஏற்பட்ட சண்டையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதேபோல், மற்றொரு இங்கிலாந்து இராணுவத்தை சேர்ந்த மைக்கேல் ஜான் தாக்கெரும் இதேபகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: