2010ம் ஆண்டின் இறுதியில் உலக அளவில் பல நாடுகளில் துவங்கிய மக்களின் எழுச்சிமிகு போராட் டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கி ன்றன. குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்களின் எழுச்சி அந்த நாடுகளில் ஆட்சிமாற்றத்தையே ஏற்படுத்தியது. துனீசியாவில் துவங்கி எகிப்து, லிபியா, யேமன் ஆகிய நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனை மேற்குலக மேலை நாடுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா அரபு நாடுகளில் தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கிக் கொள்ள தொடர்ந்து முயன்று வருகிறது. அதாவது தனது கைப்பாவையாக இருக்கக் கூடிய ஓர் அரசுதான்அங்கு அமைய வேண்டும். அதன்மூலமே தனது மேலாதிக்க தேவைக்கேற்ப அந்த நாட்டை பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறது. அதன் அடிப்படையிலேயே அரபு நாடுகளில் பல்வேறு தலையீடுகளை செய்து வருகிறது. குறிப்பாக சிரியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அங்கு அமெரிக்காவிற்கு வேண்டிய நபர் அதிபராக தேர்வு செய்யப்பட வில்லை. மாறாக பஷார்அல்அஸாத் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் மேற்குலக மேலை நாடுகள் தொடர்ந்து அந்நாட்டில் ஆயுதங்களை வினியோகம் செய்து அந்த அரசிற்கு எதிராக பல்வேறு உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அங்கு அமைதியற்ற நிலை உருவாகியிருந்தது. இந்நிலையில் அந்நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்க சிறப்பு தூதராக கோஃபி அன்னான் மே 28 அன்று சிரியாவிற்கு செல்வதாக இருந்தது. இந்நிலையில் மே 25 ம்தேதி சிரியாவின் ஹோம்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹெளலா நகரில் மிகக்கொடூரமான முறையில் வன்முறை அரங்கேற்றப்பட்டு படுகொலைகள் நிகழ்ந்தன. இதில் 34 பெண்கள், 49 குழந்தைகள் உள்ளிட்ட 108 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உலகம் முழுவதும் இந்நிகழ்வுக்கு கடும் கண்டனம் எழுந்தது. குறிப்பாக மேலைநாடுகள், அந்நாட்டின் அரசே இந்த படுகொலைகளை அரங்கேற்றியதாக குற்றம்சாட்டின. இங்கிலாந்தின் பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் ஒரு படி மேலே சென்றுமுன்புஇராக்கில் அமெரிக்க படையினர் கொ ன்று குவித்த காட்சிகளை வெளி யிட்டு அதனை சிரியாவில் நடைபெ ற்ற படுகொலைகள் என தொடர்ந்து சித்தரித்தது; செய்திகளை வெளியிட்டது. அது அடுத்த சில தினங்களிலேயேஅந்தக்காட்சிஇராக்கில்அமெரிக்கப் படைகள் நடத்திய படுகொலை காட்சிகள் என உறுதி செய்யப்பட்டது. பின்னர் பிபிசி தொலைக்காட்சி அந்தக் காட்சியை திரும்பப் பெற்றது.இந்தத் தாக்குதலை சிரியா அரசு கண்டித்ததோடு கலவர பின்னணி குறித்து புலனாய்வு செய்யவும் உத்தரவிட்டது. மேலும் கோஃபி அன்னானின் அமைதிப் பயணத் திட்டத்தை சீர்குலைப்பதற்கே மேலை நாடுகள் இந்த கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அதிபர் பஷார் அல் அஸாத்தின் ஆட்சியை தூக்கியெறியவே நடைபெற்ற சதி என அந்நாடு குற்றம் சாட்டியது. மேலும் மேலை நாடுகள் சிரியாவில் உள்நாட்டு குழப்பத்தை நீடிக்க செய்ய ஆயுதஉதவிகளைசெய்துவருகின்றன. அதனை அடியோடு நிறுத்த வேண்டும். குழப்பக்காரர்களுக்கு நிதியுதவியை செய்வதையும் முதலில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பல்வேறு உலக அரசியல் நோக்கர்கள், இந்த தாக்குதலை சிரிய அரசு நடத்த வேண்டிய அவசியமில்லை. கோஃபி அன்னானின் பயணம் அந்நாட்டு அரசுக்கு நன்மை பயக்கும் விதத்திலேயே இருந்தது.
இதில் அந்த நாட்டு அரசுதான் இந்த படுகொலை சம்பவத்தை நிறைவேற்றியது என்று கூறுவதில் அர்த்தமில்லை என்று கூறுகின்றனர்.மேலும் இந்நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது என்று உள்நாட்டு குழப்பத்தை அதிகப்படுத்தி அதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சிரியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடவே வழிவகுக்கும் வகையில் இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்தாண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் சிரியாவில் ராணுவ தலையீடு செய்வதற்கும், ஆட்சிமாற்றங்கள் ஏற்படுத்தும் வகையிலும் கொண்டு வரப்பட்ட வரைவு தீர்மானத்திற்கு சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இதன் மூலம் அந்த வரைவு தீர்மானம்நிறைவேறாமல்தடுக்கப்பட்டது.

சிரியாவை அழிக்க மேலைநாடுகள் சதி- அதிபர் பஷார் அல் அஸாத்
சிரியாவில் கடந்த மே 7-ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கு பின் முதன் முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிபர் பஷார் அல் – அஸாத் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :சிரியாவில் மே 25 அன்று நிகழ்த்தப்பட்ட கொடூரபடுகொலை சம்பவத்திற்கு மேலைநாடுகளின் சதி இருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. ஆனால் எந்த எந்த நாடுகள் என வெளிப்படையாக தெரியவில்லை. சிரியாவை அழிக்க பல நாடுகள் சேர்ந்து சதிசெய்து வருகின்றன.
ஆனால் அவர்களின் நோக்கம் நிறைவேறாது. ராணுவம், மற்றும் பொதுமக்கள் என இருதரப்பிலும் உயிரிழந்தவர்கள் சிந்திய ரத்தம் வீண்போகாது. நாம் இப்போது எதிர்கொண்டிருப்பது அரசியல் ரீதியான பிரச்னை அல்ல; நமது நாட்டை அழிக்க நினைக்கும் சில சக்திகள் சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வருகின்றன. அதனை நாம் எதிர்த்து ஒற்றுமையாக இருந்து முறியடிக்க வேண்டும். இதில் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் தலையீட்டை வலியுறுத்தும் எதிர்ப்பாளர்களுடன் எந்தவிதமான பேச்சு நடத்தவும் முடியாது. நாட்டை பாதுகாப்பதற்காக நாம் நிறைய இழந்திருக்கிருக்கிறோம். அரசியல் நடைமுறையில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை; நாட்டைக் காக்க வேண்டும் என்றால் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். அப்பணியை செய்வோம். சிரிய மக்கள் புத்திசாலிகள். உண்மையை விரைவில் புரிந்து கொள்வர் என்று பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: