சென்னை, ஜூன் 3 –
அண்ணாமலைப் பல் கலைக்கழகம், ஆங்கிலத் துறைப் பேசிரியர் முனைவர். க.முத்துராமன் சென்னை யில் அமைந்துள்ள அமெரிக்க நாட்டு தூதுவர் அலுவலகத்தால் பரிந் துரைக்கப்பட்டு, அமெரிக் காவில் கென்டக்கி மாநிலத் தில் அமைந்துள்ள லூயி வில் பல்கலைக்கழகத்தில் ‘தற்கால அமெரிக்க இலக் கியம்’ என்ற தலைப்பில் ஜூன் 15 முதல் ஜூலை 28, 2012 வரை நடைபெறும் ஆறு வார கால உயர்கல்வி ஆய்வுப்படிப்பில் பங்கேற்க ஃபுல்பிரைட் ஸ்காலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.இராம நாதன் முத்துராமனைப் பாராட்டி பின்வருமாறு கூறினார், “பெரும்பாலான கல்வியாளர்களின் கனவான ஃபுல்பிரைட் ஸ்காலர் திட் டத்திற்கு முத்துராமன் தேர்வு செய்யப்பட்டது, முத்துராமனுக்கு மட்டுமல் லாமல் அவர் சார்ந்த ஆங் கிலத்துறைக்கும் பல்கலைக் கழகத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும்”.அமெரிக்க அரசின் முழு நிதி உதவியுடன் நடை பெறும் இத்திட்டத்தில் பங்கேற்க உலக அளவில் 18 அறிஞர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர்.
இவர்களில் முத்துராமனும் ஒருவர். இந்தியாவின் பிரதி நிதியாக செல்லும் முத்து ராமனைத் தவிர, கிரீஸ், எகிப்து, ஜோர்டான், உகாண்டா, மலேசியா, புருனே, பெலாரஸ், உக்ரைன், சைட், அல்ஜீரியா உட்பட உலக அளவில் 17 அறிஞர் கள் இத்திட்டத்தில் பங்கு பெறுகின்றனர்.அமெரிக்க இலக்கிய சம்பந்தமான பயிலரங்கு கள் மற்றும் கருத்தரங்குகளை உள்ளடக்கிய இத்திட்டத் தின் பகுதியாக, அறிஞர்கள் அனைவரும் கல்விப்பயண மாக கலிபோர்னியா, சான பிரான்சிஸ்கோ,நியூ மெக் சிகோ மற்றும் வாஷிங்டன் நகரங்களுக்குச் சென்று கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்களுடன் கலந்து ரையாடுகின்றனர்.அமெரிக்க செனட்டர் வில்லியம் ஃபுல்பிரைட் அவர்களால் 1946ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில் பங்குபெறும் அறிஞர்கள் உலக அளவி லான தகுதி மறறும் போட்டி அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இது வரை ஃபுல்பிரைட் ஸ்காலர் திட்டத்தில் பங்குபெற்ற அறிஞர்களில் 43 பேர் நோபல் பரிசு பெற்றுள்ள னர். மற்றும் 78 அறிஞர்கள் புலிட்ஸர் பரிசு பெற்றுள் ளனர்.

Leave A Reply

%d bloggers like this: