கோவை, ஜூன். 2-கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் 42-ம் ஆண்டு விழா பல்கலைக்கழக அண்ணா கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு துணை வேந்தர் முருகேசபூபதி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக பதிவாளர் பி.சுப்பையன் வரவேற்றார். பொருட்களை வாங்குவதற்கான நெறிமுறைகள், அமைச்சுப் பணியாளர்களுக்கான அலுவலக நடைமுறைகள் குறித்த நூல்களை கோவை கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் என்.விஜயன்நாயர் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். பல்கலைக்கழகத்தில் சிறப்பாக சேவையாற்றிய விஞ்ஞானிகள்,பேராசிரியர்கள், ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் ஏ.சந்திரமோகன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: