கோயம்புத்தூர், ஜூன் 2 சர்வதேச நிதி மூலதனத் தின் கொடிய தாக்குதல் களுக்கு எதிராக நடை பெறும் போராட்டத்தை தொழிலாளர்கள் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று சிஐடியுவின் அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்ம நாபன் கேட்டுக் கொண்டார். சிஐடியு பொதுக்கவுன் சில் கூட்டம் கோவையில் ஜூன் 2ந்தேதி துவங்கியது. இந்தக் கூட்டம் 5ந்தேதி வரை நடைபெறுகிறது. பொதுக் கவுன்சில் கூட்டத் தை துவக்கி வைத்து ஏ.கே. பத்மநாபன் பேசுகையில் குறிப்பிட்டதாவது:தொழிற்சாலைகளின் மையமான இந்த கோயம் புத்தூர் தொழிலாளர் வர்க் கத்தின் பல போராட்டங் களுக்கு சாட்சியமாக இருந்த நகரமாகும். தென்னிந்தியா வின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட இப் பிராந்தியத்தில் பி.ராம மூர்த்தி, கே. ரமணி, ஆர். உமாநாத் போன்ற எண் ணற்ற தலைவர்கள் பல வீரஞ்செறிந்த போராட்டங் களை நடத்தியுள்ளனர். சிஐடியு-வின் பொதுக் குழுக் கூட்டம் கோவையில் நடைபெறுவது இது இரண் டாவது தடவையாகும். கொல்கத்தாவில் சிஐடியு-வின் அமைப்பு மாநாடு நடைபெற்றதை அடுத்து உடனடியாக முதல் பொதுக் குழுக் கூட்டம் இங்கே நடைபெற்றது. தொழிலாளர் வர்க்கத் தின் பலதரப்பட்ட பிரிவி னர் மீதும் ஆட்சியாளர்கள் தொடுத்துள்ள தாக்குதல் கள் தொடர்கின்றன.
சர்வ தேச நிதி மூலதனம் உலகில் உள்ள தொழிலாளர் வர்க் கத்தின் மீது ஏவியுள்ள தாக்குதலின் ஒரு பகுதியே நம் மீதான தாக்குதலு மாகும். இவர்களின் தாக்கு தல்களை நம் நாட்டில் பல் வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் இப்போது பல்வேறு வடிவங்களில் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக் கிறார்கள். சமீபத்தில் ஜோகன்னஸ் பர்க்கில் நடைபெற்ற உலகத் தொழிற்சங்க சம்மேளனத் தின் பிரசிடென்சியல் கவுன் சில் கூட்டம், இவ்வாறு சர்வதேச நிதி மூலதனத்தின் தாக்குதலுக்கு எதிராக நடை பெறும் போராட்டத்தை வலுப்படுத்திட உலகத் தொழிலாளர்கள் அனை வரும் ஒன்றுபட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது. உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து சிஐடியு வின் 13ஆவது மாநாட்டி லும், பின்னர் நடைபெற்ற செயற்குழுக் கூட்டங்களி லும் முன்பு நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தி லும் மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் விவாதித்திருக் கிறோம். உலகப் பொருளாதார நெருக்கடி இன்னமும் தொடர்கிறது. மக்களுக்கு இடையேயும், நாடுகளுக்கு இடையேயும் உள்ள வேறுபாடு களும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. உலக மக்கள் தொகையான 680 கோடி பேரில் 140 கோடி பேர் ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலர் (சுமார் 62 ரூபாய்) கூட ஈட்ட முடியாது மிகவும் இழிந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். 260 கோடி பேருக்கு சுகாதார வசதிகளுக்கான வழிகள் கிடையாது. 88.4 கோடி பேருக்கு போதுமான குடி தண்ணீர் வசதி கிடையாது. 92.5 கோடி பேர் பல நாட்கள் பசி, பட்டினியு டன் இருப்பது தொடர்கிறது. 510 கோடி பேர் எந்தவித சமூகப் பாதுகாப்புத் திட் டத்தின் கீழும் கொண்டு வரப்படவில்லை. உலகம் முழுவதும் இத்தகைய வறுமை நிலை நீடிக்கக் கூடிய சூழ்நிலையில்தான், சர்வதேச நிதி மூலதனம் உல கப் பொருளாதார நெருக் கடியின் மோசமான விளை வுகளை தொழிலாளர் வர்க் கத்தின் மீது சுமத்த முயற் சித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான போராட் டங்களை உலகின் பல பகுதி களிலும் உள்ள தொழிலா ளர் வர்க்கம் எழுச்சியுடன் நடத்திக்கொண்டிருக்கின்றன. தொழிலாளர் வர்க்கத் தின் போராட்ட அலை களை வளரும் நாடுகள் மட்டுமல்ல, முதலாளித்துவ வளர்ந்த நாடுகளும் கூட 2011இல் சந்தித்தன.உலகின் பல நாடுகளில் சர்வதேச நிதி மூலதனமும், நவீன தாராளமயக் கொள் கைகளும் அமல்படுத்தப் பட்டதை அடுத்து அந்நாடு கள் பலவற்றில் தொழிற் சங்க இயக்கங்கள் பலவீன மடைந்திருந்த சூழ்நிலை யில் இத்தகைய தொழிலா ளர் வர்க்கத்தின் எழுச்சிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை களாகும்.
இந்தியா
நமது நாட்டிலும் மத்தி யத் தொழிற்சங்கங்கள் மற் றும் தேசிய சம்மேளனங் களின் மத்தியில் ஒற்றுமை ஏற்பட்டிருக்கக் கூடிய பின் னணியில், சிஐடியு சங்கத் தின் பொதுக் குழுக் கூட்ட மும் எதிர்கால நடவடிக்கை கள் குறித்துத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.நாட்டில் பல பகுதிகளி லிருந்தும் பெண்கள் மற் றும் குழந்தைகளுக்கு எதி ரான அட்டூழியங்கள் குறித்து வரும் தகவல்கள் நம் நெஞ்சைப் பிழிகின்றன. இத்தகையக் கொடுமை களைப் புரிந்திடுவோருக்கு எதிராக ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்பட்டுள்ள சிஐடியு போன்ற தொழிற்சங்கங்கள் போராடாமல் வேறு யார் போராட முடியும்? இத்த கைய குற்றங்களுக்கு எதி ராக சிஐடியு தோழர்கள் மற்றும் மக்களின் உணர் வினை உயர்த்த வேண்டி யது நம் கடமையாகும்.மேற்கு வங்கத்தில் சிஐ டியு தலைவர்கள், ஊழியர் கள் மற்றும் அமைப்பு களுக்கு எதிராகத் தொடுக் கப்பட்டுள்ள தாக்குதல்கள் குறித்து நினைவுபடுத்த விரும்புகிறேன். சிஐடியு தோழர்கள் மீது தொடுக்கப் பட்டுள்ள கொலைபாதக மான தாக்குதல்கள் குறித்து உங்களுக்குத் தெரியும். அவர்கள் நம் வர்க்க எதிரி களுக்கு எதிராகப் போரா டும் போராட்டத்தில் அவர் களுடன் நாட்டின் பிற பகுதி தொழிலாளர்களும் இணைந்து நின்றிட வேண் டும். மேற்கு வங்கத்தில் ‘ஆட்சியில் மாற்றம் வேண் டும்’ என்று சொல்லி ஆட் சிக்கு வந்த எதேச்சதிகார சக்திகளின் கோர முகம் ஒவ் வொரு நாளும் வெளிப்பட் டுக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் போரா டிக் கொண்டிருக்கும் சிஐ டியு தோழர்களுக்கு நம் ஒரு மைப்பாட்டையும் ஆதரவி னையும் உறுதிப்படுத்திடு வோம்.இவ்வாறு ஏ.கே. பத்ம நாபன் கூறினார். (ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.