கெய்ரோ, ஜூன் 2-எகிப்தில் மக்கள் கிளர்ச் சியால் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்ட எதேச் சதிகாரி ஹோஸ்னி முபாரக் கிற்கு, கிளர்ச்சியின்போது ராணுவத்தை ஏவி 800 அப் பாவி மக்களை கொன்று குவித்த குற்றத்திற்காக, அந் நாட்டின் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப் பளித்தது.
எகிப்தில் 30 ஆண்டு களுக்கும் மேலாக எதேச் சதிகார ஆட்சி நடத்தி வந் தார் ஹோஸ்னி முபாரக். கடந்த 2011ம் ஆண்டு இவ ரது ஆட்சிக்கு எதிராக மக் கள் கொதித்தெழுந்தனர். உலகப்பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், தங்களின் அன் றாட வயிற்றுப்பிழைப்பில் கூட கைவைத்த மோசமான இந்த ஆட்சியை எதிர்த் தும், அரபு உலகில் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்துடன் மிகவும் நெருங்கி குலாவிக் கொண்டிருந்த நிலைமை யை எதிர்த்தும் எகிப்திய மக் கள் வீரம் செறிந்த போராட் டத்தினை நடத்தினார்கள். குறிப்பாக லட்சக்கணக் கான இளைஞர்கள் 18 நாட் கள் நடத்திய வரலாறு காணாத போராட்டத்தின் விளைவாக 2011 பிப்ரவரி 11ம் தேதி முபாரக் தலைநகர் கெய்ரோவைவிட்டு ஓட் டம் பிடித்தார். ஆனால் அதற்கு முன்பு இந்தப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக கெய்ரோ வின் புகழ்பெற்ற தஹ்ரீர் சதுக்கத்திலும் நாட்டின் பிறபகுதிகளிலுமாக ராணு வத்தை ஏவி கிளர்ச்சியாளர் கள் மீது கொடூரத்தாக்கு தலை முபாரக் நடத்தினார். இத்தாக்குதல்களில் 800க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர்.முபாரக்கின் வீழ்ச்சிக் குப்பிறகு கடந்த ஓராண் டுக்கும் மேலாக அந்நாட் டில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்துள்ளன. மிக சமீபத்தில் அங்கு முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந் துள்ளது. நீண்ட காலமாக அமலில் இருந்த அவசர நிலை விலக்கிக்கொள்ளப் பட்டுள்ளது. இந்நிலையில், கிளர்ச் சியில் ஈடுபட்டிருந்த 800க் கும் மேற்பட்டோர் கொல் லப்பட்ட வழக்கில் சனிக்கி ழமை கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பை கேட்பதற்காக 84 வயது முபாரக் சக்கர நாற்காலியில் கொண்டு வரப்பட்டு குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். அவருடன், அவரது ஆட்சி யில் உள்துறை அமைச்ச ராக இருந்த ஹபீப் அல்-அட்லியும் அவரது மகன் கள் ஆலா மற்றும் கமால் ஆகியோரும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.தீர்ப்பினை வாசித்த நீதி பதி அகமது ரெபாத், முபா ரக்கிற்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.
முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப்புக்கும் ஆயுள் தண்டனை விதித் தார். எனினும் இவர்களு டன் குற்றம்சாட்டப்பட்டி ருந்த ஆறு போலீஸ் உயர திகாரிகளும், முபாரக்கின் மகன்களும் விடுவிக்கப்பட் டனர்.“முபாரக்கின் ஆட்சிக் காலம், எகிப்தின் இருண்ட காலம்; குடிமக்களின் மன தில் பயங்கரக்கனவுகளை ஏற்படுத்திய இந்த ஆட்சி, மக்கள் கிளர்ச்சியால் தூக்கி யெறியப்பட்டது. அமைதி யான முறையில் ஜனநாயகத் திற்காக மக்கள் விடுத்த கோரிக்கையை அதிகாரத் தின் மூலம் ஆட்சியாளர் கள் முடக்க முயன்றனர்” என்று தனது தீர்ப்புரையில் நீதிபதி கடுமையாக சாடி யிருந்தார்.தீர்ப்பு வெளியானவுடன் முபாரக்கின் ஆதரவாளர் களுக்கும் எதிர்ப்பாளர்க ளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.