ஈரோடு, ஜூன்.2-பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ஈரோடு மின் பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எம்.ஆர். பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜி ஜோதிமணி, ஜெயக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் மின்வாரிய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். முடிவில் கே.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.